வெடிப்புள்ள தொட்டிகள் Jeffersonville, Indiana, USA 64-0726E 1ஜெபம் செய்வோம். கர்த்தாவே இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கிறோம். தேவ குமாரன் மேல் நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம். இதன் மூலமாக நித்திய ஜீவனை நாங்கள் அவர் மூலமாய் பெற்றுக் கொள்கிறோம். இந்தப்பிற்பகல் அல்லது சாயங்காலத்தில் நாங்கள் மீண்டுமாய் இன்னொரு ஆராதனைக்காக கூடிவந்திருக் கிறோம். செய்திக்காகவும் இன்று இரவு நீர் எங்களுக்கு என்ன சொல்வீர் என்பதற்காகவும் நாங்கள் உம்மை நம்பி இருக்கின்றோம், நாங்கள் உம்மை விசுவாசித்து, கர்த்தாவே உம் பேரில் காத்திருக்கிறோம். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புது பெலன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்று நீர் கூறியிருக்கிறீர், நாங்கள் உம் பெயரில் காத்திருக்கின்ற இந்த வேளையிலே அந்த எழும்புகின்ற வல்லமையை நீர் எங்களுக்குக் கொடுக்கும் படியாய் தேவனே நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த ஜனங்கள் உமக்கு என்னவாய் இருக்கிறார்கள் என்பதற்கும், எனக்கு இவர்கள் என்னவாய் இருக்கிறார் என்பதற்கும் நாங்கள் இந்த ஜனங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், பிதாவே. அவர்கள் உம்முடைய இரத்தினங்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ற வண்ணமாய் அந்த விதத்திலே நீர் உம்மை இன்று இரவு வெளிப்படச் செய்து காட்ட வேண்டும் என்று தேவனே நான் ஜெபிக்கிறேன். வியாதியாய் இருப்பவர்கள் இங்கு இருப்பார்களாயின் அவர்கள் சுகப்படுத்தப்படுவார்களாக. எவருடைய மனதிலாவது ஒரு சந்தேகம் இருக்குமாயின், அதைத் தெளிவுபடுத்தும் கர்த்தாவே. உம்முடைய பிரசன்னத்தை உம்முடைய ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தாரும் ஏனென்றால் அவைகள் எங்களுக்குத் தேவையாய் இருக்கின்றது கர்த்தாவே. நீரே எங்கள் எல்லாவற்றுக்கும் போதுமானவராய் இருக்கின்றீர். நீரில்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நீர் செய்த எல்லாவற்றிற்குமான எங்களுடைய நன்றி கூறுதலை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய ஆசீர்வாதங்களை எதிர் நோக்கியிருக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நீங்கள் உட்காரலாம். 2கடந்த ஞாயிறு இரவை காட்டிலும் இந்த ஞாயிறு இரவு சற்று குளுமையாய் இருக்கின்றது, இந்த காரியங்களுக்காக அவ்வளவு உத்தமமாய்க் கிரியைகள் நடப்பித்த சகோதரர்களுக்கு, நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அவர்கள் இரண்டோ அல்லது மூன்று சகோதரர்கள் என்று எனக்குத் தெரியும். சகோதரன், மைக் ஏகன் அவரைப் பின்னால் நான் காண்கிறேன், சகோதரன், மைக்கும், சகோதரன், சாத்மனும் தான். நான் நினைக்கிறேன் அது சகோதரன். ராய் ராபர்சனும். அது சகோதரன், உட்ஸும் (Bro,Wood) என்று, அவர்கள் எல்லாரும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் இங்கே கீழே அதற்காக வியர்வை சிந்த வேலை செய்து, இந்த செய்தியை இப்போது அல்லது இன்று கேட்க, இதை உள்ளே கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 3இப்பொழுது அடுத்த ஞாயிறு காலையில் கர்த்தருக்குச் சித்தமாய் இருக்குமானால் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை வைக்க வியாதியஸ்தருக்காக ஜெபிக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அதை ஒரு சுகமாக்கும் ஆராதனை என்று அழைக்கப் போகின்றோம். இங்கே ஒரு கூட்டக் கைக்குட்டைகள் வைக்கப்பட்டு இருக்கிறதை இன்று காலையில் நான் கவனித்தேன், அவைகளுக்காக நான் ஜெபித்தேன். நீங்கள் ஜெபித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கையிலே, நான் கைக்குட்டைகளுக்காக ஜெபித்தேன். அப்படி இருந்தும் இங்கே இன்று இரவு அவைகள் அதிகமாய் இருக்கின்றது. எனவே வியாதியஸ்தரைத் தேவன் சுகப்படுத்துகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். நமது மத்தியிலே சுகம் அடைந்தவர்களின் மகத்தான சாட்சிகள் அனேகம் இருக்கின்றன. உலகம் முழுவதுமாய் இருக்கின்றது, இதற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். நான் நினைத்தேன் அடுத்த ஞாயிறு நான் சற்று வெளியே போக வேண்டியதாயிருக்கிறது. செய்தியைப் போதிப்பதில் நாம் அவ்வளவாய் லைத்திருக்கிறோம். நமக்குச் சுகமளிக்கும் ஆராதனையை வியாதிக்காக ஜெபித்தால் நன்மையாய் இருக்கும் என்று நான் கருதினேன். தேவன் நமக்கு ஒரு மகத்தான நேரத்தைத் தந்தருளுவார் என்று நாம் நம்புகிறோம். 4இப்போது உங்களில் அநேகர் இன்று இரவு அனேக மைல்கள் கார் ஓட்டிச் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். எனவே நான் ப்ளுபார்க் சிற்றுண்டிச்சாலையில் (Blue Pork Restaurant) குழுக்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். அங்கேதான் என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட்டேன். அனேக அருமையான ஜனங்களை, நான் அவர்களுடைய கரங்களைக் குலுக்கி அவர்களோடு பேசலானேன். இதற்கு முன்னர் நான் சந்தியாத ஜனங்கள் இங்கே சபைக்கு வருகிறார்கள். அப்பேர்ப்பட்ட நண்பர்களுக்காக நான் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன், அவர்கள் ஒவ்வொருவருக் கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்களில் சிலர் கருப்பு பெரிகளைப் பொறுக்கி எங்களுக்குக் கொண்டு வந்தனர், ஒருவர் எங்களுக்கு ஒரு வாளி சர்க்கரைப்பாகு என்று நான் நினைக்கிறேன், மற்ற காரியங்களும் கொண்டுவந்தார்கள். அவைகள் எதை வெளிப் படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா? சில நாள் காலையில் நான் மேலே வந்து வீட்டைவிட்டு வெளியே போனேன். 5அன்றொரு காலையில் அங்கே ஒரு சகோதரன் உண்மையாகவே மோசமான நிலையிலிருந்தார், ஆடைகள் முதலானவை இல்லாமல் போய், அவருக்குச் சில ஆடைகளை வாங்கிக் கொடுத்து வரும்படி செய்தார். நான் வெளியே போகப் புறப்பட்டு அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு வாலி சர்க்கரைப்பாகு மீது தடுக்கி விழப்பார்த்தேன், “நான் அவரிடம் நீர் இந்தச் சர்க்கரைப்பாகை கொண்டு வந்திருக்கிறீரா” என்றேன். அதற்கு அவர் இல்லை எனக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றார். பொழுது விடிவதற்கு முன்னதாகவே நான் இங்கே வந்தேன், அப்பொழுதே அவர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் என்று சொன்னார். அதை எனக்குக் கொண்டுவந்தது என் அருமையான சகோதரன், ரடெல் எனவே இந்தக் காரியங்களை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். சில நிமிடங்களுக்கு முன்னர் பில்லி பால் என்னிடம் கூறினான், “இன்று இரவு இக்கூட்டத்தாரின் மத்தியில் எனக்காக ஒரு காணிக்கை எடுக்கப்பட்டது” என்று. அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. உங்களுடைய முயற்சிகள் முதலானவற்றை நான் பாராட்டுகிறேன், ஆனால் அவை எல்லாம் தேவை இல்லை. ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்குத் தெரியும் மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள். என்று வேதம் கூறுகிறது என்று. 6நான் செய்தியில் உங்களோடு மிகவும் நேராக ஒருவிதமாக பேசிக்கொண்டு இருந்தேன். காலையிலோ அல்லது இன்று இரவோ, இயேசுவானவர் வரப்போகின்றதாக, நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று, அபிப்பிராயத்தை அநேகர் உடையவர்களாய் இருக்கிறார்கள். எனக்குக் கூட அப்படிப்பட்ட அபிப்பிராயம் இருக்கின்றது. அவர் வருவார் என்று நான் கூறவில்லை. மீண்டும் அடுத்த வாரம் ஒரு கால் வராமல் இருக்கலாம். ஒரு கால் அடுத்த வருஷம் வராமலும். ஒருகால் பத்து வருஷங்களானாலும் வராமல் இருக்கலாம். அவர் எப்பொழுது வருவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காரியம் இருக்கின்றது அதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும், என்று நான் விரும்புகிறேன். அதாவது எந்த நிமிடத்திலும் இந்த மணி நேரத்திலும் நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதே புரிகின்றதா. அதாவது அவர் இன்றைக்கு ஒரு கால் வரவில்லை என்றால். நாளை இங்கே இருக்கலாம், எனவே அவர் வருகிறார் என்பதை உங்கள் சிந்தையில் வைத்துக்கொண்டு இருங்கள். எந்த மணி நேரம் பூமியின் மேல் என்னுடைய கடைசி மணி வேலையாயிருக்கும், அல்லது நம்மில் யாருக்கும் எப்பொழுது இருக்கும் என்று எனக்குத் தெரியாது. அவர் எப்பொழுது வருவார் என்று அறிந்த ஒருவரும் இங்கே இல்லை, அவருடைய சொந்த வார்த்தையினால் அவரே கூறியிருக்கிறார். அவருக்கும் கூட அது தெரியாது என்று. அவர் எப்பொழுது வருவார் என்பதைப் பிதா ஒருவர் மட்டுமே அறிந்திருக்கிறார் என்று அவர் கூறினார். அவர் எப்பொழுது வருவார் என்பதைக் குமாரனும் கூட அறியார் என்று அவர் கூறினார். தேவன் எப்பொழுது அவரைத் திருப்பி அனுப்புகிறாரோ அப்பொழுது தான் அவர் வருவார். ஆனால் நாமோ அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக் கிறோம். என்னுடைய தலைமுறையில் ஒரு கால் அவர் வரவில்லை என்றால் அடுத்ததில் அவர் வரலாம், அந்தத் தலைமுறையிலும் அவர் வரவில்லை என்றால். அதற்கு அடுத்தத் தலைமுறையில் அவர் வரலாம், ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அவர் வருகைக்கு எந்த ஒரு நேரமும் இன்னும் விட்டுவிடப்படவில்லை. என்று எனக்குத் தெரிகிறது. என்னைப் பொருத்தமட்டில் அவருடைய வருகை எந்த நிமிஷத்திலும் இருக்கலாம், அதனால் வானங்கள் மாறிப்போகும் என்று முதலானக் காரியங்களை நீங்கள் காண்பீர்கள் என்று அர்த்தம் இல்லை. நான் அப்படிப்பட்டதான ஒரு வருகையைக் குறித்து நான் பேசிக்கொண்டு இருக்கவில்லை, நான் எடுத்துக்கொள்ளப் படுதலைக் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறேன். 7பாருங்கள். அவர் மூன்று முறை வருகிறார் அவர் மூன்று குமாரருடைய பெயர்களில் வருகிறார். அவர் ஒரு திரித்துவத்தில் வருகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பாருங்கள் அவையாவும் அதே நேரத்தில், ஒரே நேரத்தில், எல்லா நேரத்திலும், அதே தேவன் தான். அவர் மூன்று கிருபையின் கிரியைகளைக் கொண்டுவரும் படியாய் அவர் வருகிறார். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். தேவனில் இருக்கிற எல்லாக் காரியங்களும் மூன்றில் முற்றுப் பெறுகிறதாய் இருக்கின்றது. முதலாவதாக அவருடைய மணவாட்டியை மீட்டுக் கொள்ளும் படியாய் அவர் வருகிறார். இரண்டாவதாக ஒரு எடுத்துக் கொள்ளப்படுதலாய் அவருடைய மணவாட்டியைக் கொண்டுபோகும் படியாய் அவர் வருகிறார். மூன்றாவதாக அவருடைய மணவாட்டியுடன் ராஜாவும், ராணியுமாக வருகிறார். அப்பொழுதுதான அவருடைய வருகையை எல்லா ஜனங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் எடுத்துக்கொள்ளப்பட வரும்போது ஆயத்தமாய் இருக்கிறவைகளைத் தவிர வேற ஒருவரும் அவருடைய வருகையை அறியமாட்டார்கள். அங்கே வெறுமனே ஆட்கள் காணாமல் போய்விடுவார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் அறியாதிருப் பார்கள். ஒரு நொடியில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். காணாமல் போய்விடுவார்கள் ஒரு நொடிப் பொழுதில் மாற்றமடைந்து, கண்ணிமைப் பொழுதில் மாறிவிடு வார்கள். எனவே அதற்காக ஆயத்தமாய் இருங்கள், நேசித்தவர்களை ஒரு காலையில் காணமுடியாமல் போவது மிகவும் பயங்கரமானதாய் இருக்கும், ஒருவராலும் அவர்களைக் கண்டுபிடிக் கமுடியாது. அது நடந்தேறி விட்டது அதைத் தவற விட்டாய் என்று அறிந்து கொள்வது மிகவும் மோசமாக இருக்கு மல்லவா, எனவே தேவனுக்கு முன்பாக வையுங்கள். 8இப்பொழுது அடுத்த வாரம் கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்துத் திங்கட்கிழமை இந்தத் திங்கள் கிழமையிலிருந்து ஒரு வாரம் கழித்து, கர்த்தருக்குச் சித்தமாய் இருக்குமானால், நான் குடும்பத்தை அரிசோனாவுக்குக் கொண்டு போகிறேன். அவர்கள் அங்கே பள்ளிக்குப் போக வேண்டும், பின்னர் நான் திரும்பி வருவேன். எனக்கு அங்கே போவதற்கு எந்த ஒரு ஆராதனையும் அங்கே இல்லை, நான் எப்போதோ ஒரு சமயம் தான் அரிசோனாவுக்குக் போவதுண்டு, நான் வேறு எங்காவது போவேன். அடுத்தத் திங்கள் நான் மனைவியை அங்கு அழைத்துப் போவேன், நான் மீண்டுமாய் இங்கே திரும்பி வருவேன், நான் இங்கே இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குப் போகிறேன். நான் திருப்பிக் கொலராடோவிற்கு வருகிறேன். கிறிஸ்மஸ்க்கு சமீபமாய் நான் மீண்டும் அரிசோனாவில் இருப்பேன், சில நிமிஷங்களுக்கு மட்டும், ஒருவேளை இரண்டு மூன்று நாட்களுக்குக் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து இருந்து, பின்னர் இங்கே திரும்பி வந்து கிறிஸ்மஸ் விடுமுறை முழுவதும், இங்கே இருப்பேன். கர்த்தருக்குச் சித்தமானால் புதுவருட வாரம் முழுவதுமாய் ஒரு ஆராதனையை வைப்போம். 9ஆக அப்படியானால் உண்மையிலேயே, இங்கேயே தான் நான் இருக்கிறேன், அங்கே வெளியே இருப்பதைக் காட்டிலும் இங்கே பத்துமடங்கு அதிகமாக இருக்கிறேன். ஏனென்றால் அங்கே எங்களுக்கு எந்தச் சபையோ ஆராதனையோ கிடையாது. அங்கே எங்களுக்கு ஒன்றுமே கிடையாது, சபை ஆராதனை போன்ற விதத்தில். அது அதைக் குறித்த ஒரு கெட்ட காரியமாய் இருக்கின்றது. இங்கே உங்களுடைய பிள்ளைகள் செய்திகளைக் கேட்பது போன்று, அங்கே செய்தியைக் கேட்க என்னுடைய பிள்ளைகளை அனுப்ப எனக்கு இடமே கிடையாது. எனவே அது எங்களுக்கு இருக்கின்ற ஒரு கோளாறு, அவர்கள் எல்லாரும் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள். அது ஒரு ஈரப்பசை இல்லாத ஒரு உஷ்ணமான வறட்சியான சீதோசனம், ஆனால் எல்லாப் பிள்ளைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிய நான் போதுமான அளவுக்கு அங்கே இருப்பதில்லை. நான் எப்பொழுதும் போய்க்கொண்டே இருக்கிறேன், நான் சுற்றித்திரிகிற வனாய்ப் பிறந்தேன் என யூகிக்கிறேன். என் மனைவி என்னை அந்தவிதமாய் அழைக்கிறாள், அவள் இங்கே இருக்கிறாள் என்று நான் அறிவேன், எனவே சபைக்குப் பின்னர் அதைப் பார்க்கிறேன் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கே தெரியும் அது என்னவென்று, அப்படியே மணல் இடம்விட்டு இடம் அசைவது போன்று. காற்று இடம் விட்டு இடத்துக்குப் போவது போன்றும் இருக்கும். அல்லது வேறு வார்த்தையில் கூறினால், நான் எப்பொழுதும் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறேன். எனக்குத் திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது நான் சில சமயங்களில் வீட்டைச் சுற்றிலும் ஒரு அன்னியன் என்று நான் நினைப்பதுண்டு ஏனென்றால் நான் போய்க் கொண்டே இருக்கிறேன். ஆனால் என்றோ ஒரு நாள் நம்முடைய தாய் நாட்டிலே போய் தங்கும் அந்த நேரத்திற்காக நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இப்பொழுதோ போர் நடந்து கொண்டு இருக்கின்றது எனவே நாம் ஜெபத்தில் இருப்போம். 10மறந்து போகாதீர்கள், அடுத்த ஞாயிறு காலையை கர்த்தருக்குச் சித்தமானால், உங்களுடைய வியாதியஸ் தர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் கொண்டு வாருங்கள். சீக்கிரமாய் வாருங்கள் உங்கள் இடத்தை பிடித்துக் கொள்ளுங்கள், ஒருவேளை ஜெபித்து கொள்ளக் கூடிய ஒரு கூட்டமே இருக்கின்றது. நாம் ஜெப அட்டைகளைக் கொடுக்க வேண்டும். போதுமான அளவு இல்லையென்றால் நாங்கள் ஜெப அட்டைகள் கொடுக்க மாட்டோம், வெறுமனே ஒன்று இரண்டு டஜன் ஜனங்களைக் கொண்ட ஒரு சிறு ஜெப வரிசையை ஏற்படுத்தி விடுவோம். அனேகமாக ஜெப அட்டைகள் கொடுப்போம், எனவே வழக்கமான ஆராதனைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கொடுக்கப்படலாம். நான் நினைக்கிறேன் அது எட்டு அல்லது எட்டரை மணிக்கு இருக்கலாம், அவர்கள் ஜெப அட்டைகளைக் கொடுப்பார்கள். சபையைத் திறந்து ஜெப அட்டை களைக் கொடுப்பார்கள், அடுத்த ஞாயிறு காலையில். அதன் பின்னர் இங்கே இருக்க நிச்சயம் உள்ளவர்களாய் இருங்கள், உங்களுடைய அருமையானவர்களை இங்கே கொண்டு வந்து, உள்ளே கொண்டுவந்து உட்கார வையுங்கள். சபைக்குள் அருமையாயும், குளிர்ச்சியாயும் இருக்கும், அவர்கள் சுகவீனமாய் இருப்பார்களேயானால் அவர்களுக்காக ஜெபிக்கும் படியாக எங்களால் முடிந்த எல்லா காரியங்களையும் நாங்கள் செய்வோம். இந்த அன்பின் காணிக்கைக்காக மீண்டுமாய் உங்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். 11இன்று இரவு நாம் சில தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கப் போகின்றோம். அவருடைய வார்த்தைகளுக்கும் நமக்கும் கொண்டு வருகிற அவருடைய சமூகத்தின் சம்பவத்திற்காக, ஆயத்தம் உள்ளவர்களாய் இருங்கள். ஒரு பகுதியை எடுத்து நம்மால் வாசிக்க முடியும் என்று நாமறிவோம் ஆனால் தேவன் நமக்கு அந்த பொருளை வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டும் புரிகின்றதா. நாம் ஒரு பகுதியை எடுத்து வாசிக்கலாம், ஆனால் தேவன் அந்தப் பொருளை நமக்கு வெளிப்படுத்தவேண்டும். நீங்கள் இப்பொழுது எரேமியாவின் புத்தகம் இரண்டாம் அதிகாரத்துக்குத் திருப்புங்கள். கர்த்தருக்குள் ஒரு விலையேறப்பெற்ற சகோதரனாகிய சகோ, லீ வேயில் நமது மத்தியில் இருப்பது எனக்கு மிக்க சந்தோஷம் என்று கூற விரும்புகிறேன். இங்கு இருக்கின்ற இந்த சகோதரனை என்னால் அவர் பெயரை ஞாபகப்படுத்த முடிய வில்லை. சகோ, வில்லார்ட் கிராஸ் ஆர்கன் சாசிலிருந்து வந்த சகோ, ஜானும் மற்றவர்களும் பாப்லர் பிளஃபிலிருந்து (poplar bluff) சகோ, பிளேயரும் நான் பார்க்கிறேன். ஓ சகோ, ஜாக்சன் சகோ, ரடெல் இன்னும் அநேகர் இருக்கின்றனர், என்னால் அவர்கள் பெயர் களை கூறமுடியவில்லை. எல்லாருடைய பெயர் களையும் கூற விரும்புகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது அது உங்களுக்குத் தெரியும் புரியும். சகோ, பென் பிரையண்ட் அவர் அங்கே உட்கார்ந்திருக்கிறதை நான் காண்கிறேன். அவர் வழக்கமாக நான் பிரசங்கிக்கும் போது என்னுடைய ஆமென் மூளையாக இருக்கிறார். சகோதரன், பென். அவர்களை அவருடைய சத்தத்தினால் யாவரும் அறிந்து கொள்வார்கள், இல்லையா. 12ஒரு சமயம் நாங்கள் கலிபோர்னியாவில் உட்கார்ந்து கொண்டிருந்தோம், பள்ளத்தாக்கிலே நான் பாப்டிஸ்ட் ஜனங்களுக்காக, ஒரு செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தேன். அங்கே அவர்களுக்கு ஒரு பெரிய கூடாரம் இருந்தது, ஒருவிதமான பாப்டிஸ்ட் சகோதரர்கள் அங்கே இருந்தனர். எந்த பக்கத்திலிருந்தும் ஒரு ஆமென் கூட நான் கேட்கவில்லை. உங்களுக்குத் தெரியும், முகத் தில் தீட்டப்பட்டிருக்கும் வர்ணம் உடைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். பின்னர் முதலாவது காரியம் அதைப்போன்று ஒரு ஜோடி பாதங்கள் மேலே போய்க்கொண்டு இருக்கிறதாயும், இரண்டு பெரிய கரங்களும் ஒரு கறுத்த மயிரும், ஆடிக்கொண்டிருக்கும் ஆமென்... என்று சத்தமிட்டுக் கொண்டு அதேபோன்று அலறிக்கொண்டு இருக்கிறதை நான் கண்டேன். கீழ் நோக்கிப் பார்த்து பென் நீர் எங்கிருந்து வருகிறீர் என்று நான் கூறினேன். அவர் உண்மையாகவே ஆமென்... என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவருடைய மனைவி சற்று லேசாக அவரை நோக்கி பார்க்கிறதே நான் காண்கிறேன். அவருடைய மயிர் கருமையை லேசாக இழந்து கொண்டே போகிறது, ஆனால் அதெல்லாம் பரவாயில்லை என்று உங்களுக்குத் தெரியும். அதைக்குறித்துக் கவலைப் படாதீர்கள், எண்ணுடையதைக் குறித்து அனேக நாட்களுக்கு முன்பே நான் கவலைப்படுவதை விட்டு விட்டேன். எனவே இப்பொழுது ஜெபிக்க மறந்து போக வேண்டாம். 13ஆராதனையில் உத்தமமான பாகத்துக்கு நாம் போய்க்கொண்டிருக்கையிலே, நினைவிருக்கட்டும் நாம் இந்த வார்த்தைகளை வாசித்தால், அப்பொழுது தேவன் அவருடைய வார்த்தையை ஆசீர்வதிப்பார். அது வெறுமையாய் என்னிடத்திற்கு திரும்பி வராமல், அது நான் விரும்புகிறதைச் செய்து நான் அதை அனுப்பின காரியம் ஆகும்படி வாய்க்கும். வார்த்தையை வாசிப்பது எனக்குத் தெரியும், நான் எப்பொழுதும் சரியாய் இருப்பேன். நான் வார்த்தையை வாசிக்கும் போது தேவனுடைய அவருடைய வார்த்தையைக் கணப் படுத்துவார். அவருடைய வார்த்தைக்குக் கணம் செலுத்தும் வண்ணமாய் நாம் இப்பொழுது எழும்பி நிற்போம். எரேமியாவின் புத்தகம் இரண்டாம் அதிகாரம் பனிரெண்டு பதிமூன்று வசனங்கள் எரேமியா-2 -12, 13 வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக்கொந் தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். ஜெபத்திற்காக நாம் தலைகளை வணங்குவோம். 14அன்புள்ள தேவனே உம்முடைய வார்த்தைகள் வாசிக்கப்பட்டு ஆயிற்று. நீர் அந்த வார்த்தையை ஆசீர்வதித்து இன்று இரவு எங்களுக்கு அந்த உவமையை, அல்லது அதற்கு இணையானதை எங்களுக்கு கொடுக்கும் படியாய் நாங்கள் ஜெபிக் கிறோம். கடந்து போன நாட்களில் இஸ்ரவேலை நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கிறோம். அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த போது அவர்களுக்கு நீர் என்ன செய்தீர் என்பதையும், வார்த்தைக்கு அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது நீர் அவர்களுக்கு என்ன செய்தீர் என்பதையும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், கற்றுக் கொள்ள முடியும் என்பதை நாங்கள் காணமுடியும் என்று வேதாகமம் போதிக்கின்றது. எனவே ஒரு விசேஷமான வழியில் இன்று இரவு எங்களோடு பேசி, இன்று காலையில் நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம் என்று நாம் அறிந்து கொண்டதான நாளில், நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அறியும் படியாய் செய்யும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம் ஆமென். நீங்கள் உட்காரலாம். 15இன்று இரவு ஒரு குறுகிய நேரத்துக்கு “வெடிப்புள்ள தொட்டிகள்” என்ற பொருளின் பெயரில் பேச விரும்புகிறேன். இஸ்ரவேல் இரண்டு மகத்தான தீமைகள் செய்தார்கள். அவர்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுத் திரும்பி, தாங்கள் குடிப்பதற்கு தாங்களாகவே தொட்டிகளை வெட்டிக் கொண்டார்கள், என்று தேவன் சொன்னார். இப்பொழுது அது ஏதோ காரியம், இந்தப் பொருளைக் குறித்து நான் நினைத்ததற்குக் காரணம் என்னவென்றால் இன்று காலையில் நான் சொல்லிக்கொண்டிருந்த காரியங்களும். அதாவது நான் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற, அந்த வேலையும், ஒரே போக்காய் இருக்கின்றது, அதன் காரணமாகவே நாம் இன்றைக்கு போராடி கொண்டிருக்கிறோம். தேவன் என்னவாய் இருந்தாரோ, அவர் அதே விதமாய் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதால், 16நாம் ஒரு உதாரணமாக இஸ்ரவேலை நோக்கி பார்க்கிறோம். தேவன் கனப்படுத்தினதான ஒரே ஒரு காரியம் தான் இருக்கின்றது அது என்னவெனில், அவருடைய ஜனங்களுக்காக அவர் ஏற்படுத்தின அவருடைய வழியாய் இருக்கின்றது. அவர்கள் அந்த வழியை விட்டு விலகும்போது, அப்பொழுது; அவர்கள் அவரை கனவீனப்படுத்துகிறார்கள். அது என்னவாய் இருந்தாலும் சரி அவர் செய்யும்படி கூறின எதையும் விட்டு வழி விலகிப் போகும் போது. தேவன் ஜனங்களை கஷ்டப்படும் படி செய்தார். தொடாதே, கையாளாதே, ருசி பாராதே, என்றும் கூட கற்பனைகளையும் கொடுத்தார். அதைச் செய்தது தீமையின் காரணத்தினால் அல்ல, ஆனால் அவர் என்ன செய்ய சொன்னாரோ அதற்குக் கீழ்ப்படியாத தீமையின் காரணம் தான். தண்டனை இல்லாமல் ஒரு சட்டத்திற்கு அங்கே எப்பொழுதுமே எந்த ஒரு சட்டமும் இருக்காது. ஏனென்றால் அங்கே தண்டனை இல்லையென்றால், எந்த சட்டத்திற்கும் ஒரு தண்டனை இல்லையென்றால், அந்த சட்டத்திற்கு அங்கு மதிப்பே கிடையாது. 17இப்பொழுது அவர்கள் அந்த நாளிலே என்ன செய்தார்களோ, அதை நாம் செய்து கொண்டிருக் கிறவற்றுக்கு, சபை ஜனங்கள் செய்து கொண்டிருக் கிறவர்களுக்கு, இணையாய் இருக்கின்றது இன்று நாம் கண்டோம். இப்பொழுது நாம் இங்கே ஒரு வினோதமான காரியத்தை பார்க்கிறோம். நீங்கள் உங்களுக்காக வெடிப்புள்ள தொட்டிகளை வெட்டிக் கொண்டீர்கள், என்று அவர் கூறின போது, அது ஒருக்கால் சிலருக்கு வினோதமாய் இருக்கலாம். ஒருக்கால் உங்களில் சிலருக்கு அந்த தொட்டிகள் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். தொட்டி என்று கூறப்பட் டுள்ளது என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும். ஓ பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. நீங்கள் எப்பொழுதாவது ஒரு பண்ணை வீட்டில் வசித்திருந்தால் தொட்டிகள் என்றால் என்னவென்று அறிந்திருப்பீர்கள். ஒரு தண்ணீர் தொட்டி என்னவென்று அறிந்திருக்க, நான் தொட்டியிலிருந்து போதுமான பூச்சிகளைக் கொண்ட தண்ணீரை நான் குடித்தது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பிரஷ் ஆர்பரிலுல்ல. (Brush arbor) தேசத்தில் நான் பிரசங்கித்து இருக்கிறேன். அங்கே ஒரு ஜாடியில் மழை தண்ணீர் இருக்கும் அது மிகவும் பழமையாய் இருக்கும். இரவு நேரத்தில் பூச்சிகள் அதற்குள்ளாகச் சென்றுவிடும். எனவே தொட்டித் தண்ணீர் என்றால் என்னவென்றால் எனக்குத் தெரியும். 18தண்ணீர் தொட்டி என்பது ஒரு கிணற்றுக்குப் பதிலாக, பூமிக்குள் தோண்டப்பட்ட ஒரு இடம், அல்லது ஒரு காரியமாய் இருக்கின்றது. எங்கே ஜனங்களுக்கு ஒரு கிணறு இல்லையோ அப்படிப்பட்ட இடத்தில் அவர்களுக்குத் தொட்டிகள் உண்டாயிருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், தண்ணீர் தொட்டி என்பது மனிதனால் பூமிக்குள் வெட்டப்பட்ட ஒரு தொட்டி, ஒருக்கால் வித்தியாசமாய் இருக்கலாம் ஒரு கிணறு, தண்ணீரை தேக்கிவைத்து உபயோகிக்க, மனிதன் தோண்டின தொட்டி சிலர் அதை கழுவ உபயோகிப் பார்கள், சிலர் குடிக்கவும் வித்தியாசமான வழியில் உபயோகிக்கவும் அதை உபயோகிப்பார்கள். சில சமயங்களில் நான் உபயோகிக்கும் தண்ணீர் எல்லாமுமே இப்படிப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் இருந்து வந்தவைகளாய் இருக்கலாம். வழக்கமாக ராட்டினம் போல சக்கரத்தை சுற்றி சுற்றி சுற்றி தண்ணீரை மேலாக கொண்டுவர வேண்டியதாய் இருக்கும். தொட்டியில் இருந்து தண்ணீரை மேலாக கொண்டுவர அதில் சிறிய சிறிய வாளிகள் வைக்கப்பட்டிருக்கும். வெட்டப்பட்ட தொட்டிகள் என்பதை குறித்து, ஒரு காரியத்தை நாம் கவனிக்கிறோம் அது கிணற்றுக்கு அடி வித்தியாசமானது. தொட்டிகள் காலியாகி விடலாம், தொட்டி தன்னில் தானாக தண்ணீரை நிரப்பிக் கொள்ளாது. அதை நம்பி இருக்க முடியாது, ஒரு வெட்டப்பட்ட தொட்டியை நீ நம்ப முடியாது. கோடை காலத்திலோ மாறி காலத்திலோ அங்கே பெய்யக்கூடிய மழையின் தண்ணீரை நம்பி, அந்தத் தொட்டிகள் அங்கே இருக்கின்றன. வழக்கமாக குளிர்காலத்தில் பனியும் மழையும் வரும்போது, அது தண்ணீராக மாறி அந்த தொட்டிக்குள் ஓடி விழுகின்றது. அந்த தொட்டிக்குள் தண்ணீர் வந்து விழவில்லை என்றால், உங்களுக்கு தண்ணீரே கிடைக்காது. தன்னில் தானே அது காய்ந்து விடும், அது தன்னில் தானே நிரப்பிக் கொள்ளவும் முடியாது. அந்தப் பழைய தொட்டியால் தன்னைத் தானே நிரப்பிக் கொள்ள முடியாது. தன்னுடைய நிரப்புதலை கீழே விழுகின்ற, பெய்கின்ற மழையி லிருந்து பெற்றுக்கொள்கிறது. 19மேலும் வெட்டப்பட்ட தொட்டிகளை குறித்து நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வழக்கமாக நீங்கள் பார்க்கலாம், அல்லது எங்களுடைய ஊரில் அந்த விதமாக இருக்கின்றது. வழக்கமாக வீட்டை சுற்றியுள்ள தானிய களம், வீட்டைப் போன்று இரண்டு மடங்கு இருக்கும், அவர்கள் வழக்கமாக களத்தில் விழுகின்ற மழைத் தண்ணீரை அந்த தொட்டிக்குள் பாயும் படியாக செய்வார்கள். அங்கே இருக்கின்ற அந்த பழைய வெட்டப்பட்ட தொட்டி, எனக்கு ஞாபகம் வருகிறது, மழைத் தண்ணீர் குழாய்களும் கூட, அந்த தண்ணீரும் அந்த தொட்டிக்குள் கொண்டு செல்லும். களத்தில் விழும் தண்ணீரினால் தொட்டி நிரப்பப்படும். எனவே தண்ணீரானது வீட்டின் கூரையில் இருந்து கொண்டு போகப் படுகிறது. அங்கே பல மிருகங்கள் அந்த குதிரை லாயத்தை சுற்றி நடந்து திரியும், அந்தத் திறந்தவெளி களத்திலிருந்து, அழுக்கு முதலானவைகள் கூரையின் மேல், வறண்ட காலத்தில் தங்கும். பின்னர் தண்ணீர் வரும்போது, கூரையின் மேல் இருக்கின்ற, அழுக்கு எல்லாவற்றையும் அடித்து கொண்டு, தண்ணீர் கால்வாயின் வழியாக, மனிதனில் செய்யப்பட்ட மூக்குள்ள நீர் குழாய் வழியாக, மனிதனால் வெட்டப்பட்ட தொட்டிக்குள் பாயும். உங்களிடத்தில் ஒரு வெட்டப்பட்ட தொட்டி இருக்குமாயின், அங்கே ஒரு பெரிய கலக்கல், இல்லை என்றால் வேறு என்ன தான் இருக்கும், என்று எனக்கு தெரியவில்லை, ஆம் ஐயா. அது எல்லாம் மனிதனால் ஆனதும், அவ்வளவு அசுத்தமாயும் இருக்கும். 20உங்களுக்கு தெரியும் அதன்மேல் நாங்கள் ஒரு வடிகட்டும் துணியை வைத்திருப்போம், அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதன் மேல் ஒரு வடிகட்டும் துணியை வைத்து, எல்லா பூச்சிகளையும் அதற்குள் விழாதபடி, வடிகட்டி பிடித்து விடுவோம், எல்லா பக்கத்திலிருந்தும். தண்ணீர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கும், அங்கிருந்து தொட்டிக்குள்ளும் பாயும். எங்களால் முடிந்த அளவிற்கு எல்லா பூச்சிகளையும், அழுக்கையும் வடிகட்ட அதின்மேல் ஒரு வடிகட்டும் துணியை போடுவோம். நிச்சயமாக அது உண்மையான அழுக்கை வடி கட்டாது, ஆனால் கீழே விழுந்து, அதற்குள்ளாக பாயும் பெரியவற்றை அது வடிகட்டி விடும். அந்த பூச்சிகளை வடிகட்டி விடும். ஆனால் அந்த பூச்சியின் சாரத்தை அதனால் வடிகட்ட முடியாது. அது தண்ணீரோடு கலந்து விடுகிறது. 21எனவே உங்களிடத்தில் ஒரு பழைய அசுத்தமான வெட்டப்பட்ட தொட்டி இருக்குமாயின், உங்களிடத்தில் உண்மையாகவே ஒரு அசுத்தமான கலக்கல் இருக்கும். சில நாட்களுக்குள் அந்தத் தண்ணீரை அப்படியே தேக்க வைப்பீர்களானால், அது தேக்கப்பட்ட தண்ணீராக ஆகும். நீங்கள் தண்ணீரை ஒரு தொட்டியில் அப்படியே தேக்கி வைப்பீர்களானால், அது தேக்கப்பட்ட தண்ணீராக ஆகும். அதில் தவளைகளும், பல்லிகளும், பாம்புகளும், நிறைந் திருக்கும். நாங்கள் அதை (Wiggle Tails) (வேகமாக அசைந்து செல்-வால்கள்) என்று அழைப்போம். நீங்கள் அதை எப்படி அழைப்பீர்களோ எனக்கு தெரியாது ஆனால் அது ஒரு ஒட்டுண்ணி அல்ல, ஆனால் ஏதோ ஒரு சிறு பூச்சிகள் அதில் வந்துவிடுகின்றன, நாங்கள் அதை (Wiggle Tails) (வேகமாக அசைந்து செல்-வால்கள்) என்று அழைப் போம். அது என்னவென்று உங்களுக்கு தெரியும், நான் எதை குறித்து பேசுகிறேன் என்று எத்தனை பேருக்கு தெரியும். ஓ ஏன்? நிச்சயமாக கிராமவாசிகளாகிய உங்களில் யாவருக்கும் அது தெரியும். அந்த தேக்கம் அவைகளால் நிறைந்திருக்கும். மட்டும் அல்லாமல் தேக்க விரும்பிகள் எல்லாரும் அங்கே வந்து விடுவார்கள். அவைகள் உண்மை யாகவே அங்கு வருகின்றன, ஏனென்றால்; அது தேக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. அது தேக்கி வைக்கப்பட்டு இருக்கிற காரணத்தால், தேக்கி வைக்கப்பட்டவைகளை விரும்புகின்ற மிருகங்கள் யாவும் அங்கே வரும். 22அது அப்படியே முழுவதுமாக இன்றைக்கு உள்ள சபைகளை போன்று இருக்கின்றது. நாம் அதை விட்டு விட்டோம் என்று நினைக்கிறேன். அன்றைக்கு இருந்த இஸ்ரவேலரை போன்றே, இன்றைக்கு சபையானது செய்திருக்கிற மகத்தான பாவங்களில் ஒன்றாய் இது இருக்கின்றது. ஜீவத்தண்ணீர் ஊற்றை விட்டு, அவர்கள் தங்களுக்கென்று மனிதனாலான, தொட்டியை வெட்டி கொண்டார்கள். அந்த விதமான தண்ணீரை, விரும்புகின்ற அனைத்திற்கும். அது ஒரு குடியிருப்பாய் ஆயிற்று. பல்லிகள், தவளைகள், எல்லாவித அசுத்தமான கிருமிகள், அவைகளில் ஜீவிக்கின்றது. ஏனென்றால். அது மனிதனால் ஆக்கப்பட்ட ஒரு தொட்டியாய் இருக்கின்றது. இந்தத் தொட்டியில், இந்தக் காரியங்கள் எல்லாம் தங்கும், இது இன்றைய ஸ்தாபனக்காரர்களில், ஒரு பரிபூரண உதாரணமாயிருக்கிறது. நீங்கள் சொல்லலாம். சகோதரன். பிரான்ஹாம். நீர் ஏன் இதை இவ்வளவு கடினமாய் தாக்குகிறீர்? என்று. அது தாக்கப்பட வேண்டும். அது தாக்க தான் பட வேண்டும். அதைவிட்டு ஓடுங்கள். ஏனென்றால்: அது முடிவிலே மிருகத்தின் முத்திரையாய் உருவெடுக்கும். இது சத்தியம் என்பது நினைவிருக்கட்டும். அது மிருகத்தின் முத்திரையாக ஆகும். ஸ்தாபனங்கள் நேராக அதற்குள்ளாக செல்லும். இப்பொழுதே அது அந்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறது, ஒரு வல்லமையினால் அது பலவந்தம் பண்ணப்படும். பழைய ரோம சாம்ராஜ்யத்துக்குள் நோக்கிப் பாருங்கள். பின்வாங்கி போன முத்திரைக்கு அவர்களை வழிநடத்தினது; அதுதான். மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ளாமல், ஒருவனும் வாங்கவோ விற்கவோ முடியாது. அவன் அதை உடையவனாக இருக்க வேண்டும், என்று நீங்கள் கண்டறிந்தீர்கள். 23இரண்டு வகையான ஜனங்கள் மட்டுமே, பூமியின் மேல் அப்பொழுது இருப்பார்கள். தேவனுடைய முத்திரையை உடையவர்களும், மிருகத்தின் முத்திரையை உடையவர்களுமாய் இருக்கின்றவர்களே, பூமியின் மேல் இருப்பார்கள். இருவகையானவர்கள் மட்டுமே இருப் பார்கள், எனவே; ஒன்று நீங்கள், இதை உடையவர்களாய் இருக்க வேண்டும். அல்லது நீங்கள், அதை உடையவர்களாய் இருக்க வேண்டும். அது ஒரு பின் வாங்கி போனதாய், மார்க்கத்தின் முத்திரையாய், பின்வாங்கி போன மார்க்கமாய் இருக்கும். அது மிருகத்துக்கு, ஒரு சொரூபத்தையுடை யதாய் இருக்கப்போகின்றது. நாம் தியானிக்கையில், ரோமாபுரி தான்; அந்த இருந்ததும், இருக்கிறதும், இருக்க போவதுமான, அந்த மிருகம் என்று கண்டறிந்தோம். சரியாக அப்படியே; அது வேறு ஏதோ ஒன்று என்று கூற, எந்த வழியும் இல்லை; அது ரோமாபுரியே தான். ரோமாபுரி என்ன செய்தது, “அஞ்ஞான ரோமாபுரியில் இருந்து, போப்பானவரின் ரோமாபுரியாக; ஆகிவிட்டது” ஒரு ஒழுங்கு முறைமை ஆகப்பட்ட ஆவணமாக ஆகிவிட்டது. உலகம் முழுவதுமான, ஒரு ஸ்தாபனம். அந்த ஒரு மார்க்கத்துக்குள்ளாக எல்லாரையும் பலவந்தமாய் கொண்டு செல்லும்; அல்லது மரணத்திற்குள்ளாக்கும். 24இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் காட்சியில் வருகிறது, ஒரு வினோதமான காரியமாய் இருக்கின்றது. அது ஒரு ஆட்டுக்குட்டியை போல் இருக்கின்றது. அந்த ஆட்டுக்குட்டிக்கு இரண்டு சிறிய கொம்புகள் இருந்தன. அரசாங்க மதசம்பந்தமான, இரு உரிமைகளும். கொஞ்சம் கழித்து அது ஒரு ஆட்டுக் குட்டியாய் இருந்தபோதே. அது வழு சர்ப்பத்தை போல பேசினது, அது மிருகத்தின் அதிகாரம் முழுவதையும், அதன் முன்பாக நடப்பித்தது, என்று நாம் அப்பொழுது கண்டறிந்தோம். அந்த மிருகத்துக்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள் என்று வேதம் நமக்கு சொல்லுகின்றது. சொரூபம் என்று சொல்லும்போது, அது ஏதோ ஒன்றை போன்றதாகவே காரியம். அதை நாம் இப்பொழுதே நேராக காணலாம், அதனுடைய விழுந்துபோன நிலைமையில், சபையானது சபையின் உலக ஆலோசனை சங்கத்தை உருவாக்குகின்றது. அதுதான் ரோமாபுரியின் சொருப மாயிருக்கும். அதுவே அஞ்ஞான ரோமாபுரி, அல்லது போப்பானவரின் ரோம். ஜனங்களை கட்டாயப் படுத்தினது போன்று, ஜனங்களை அது கட்டாயப் படுத்தும். எனவே வேறு எந்த வழியும், வேறு எந்தக் காரியமும் கிடையாது. ஆனால் அதுதான் சத்தியம். அதன் காரணமாகத்தான், நான் அதை என்னுடைய காலத்தில், என்னுடைய நேரத்தில் அடித்து கூறுகிறேன். ஏனென்றால், அது அடித்துக் கூற வேண்டியதாய் இருக்கின்றது, “அவளை விட்டு வெளியே வாருங்கள்” ஜனங்களே அவளுடைய பாவங்களுக்கு பங்காளிகளாகா திருகள்; என்ற அழைப்பு வந்தாயிற்று. 25இந்த அசுசியான, சுத்தமில்லாத வெட்டப்பட்ட தொட்டிகளுக்கு, நான் அதை ஒப்பிடுகிறேன். அவரே ஜீவத் தண்ணீரின் ஊற்றாய் இருக்கிறார். அவரே ஜீவிக்கின்ற தண்ணீராய் இருக்கின்றார். மனிதர்கள் இதை விட்டு விட்டு, அசுத்தங்களை தன்னிடத்தே பிடித்து வைத்துக்கொள்ளும், வெட்டப்பட்ட தொட் டிகளை, தங்களுக்கென்று வெட்டி கொள்ளுகிறார்கள். அதனால் அதை மட்டும்தான் பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அதைத்தான் ஸ்தாபனங்கள் செய்கிறது, அதனோடு கூட சேர்ந்துவிடுகின்ற, அதனோடு சேர்ந்துகொள்ள விரும் புகின்ற, எல்லா காரியங்களையும் அது பிடித்து வைத்துக் கொள்ளுகின்றது. அதனிடம் கொஞ்சம் பணம் வசதி, அல்லது ஒரு விதமான ஆடை அணிந்திருந்தால், அவர்கள் அதை உள்ளே ஏற்றுக்கொள்ள மனமுடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள், என்பதை குறித்து அக்கறை இல்லை, எப்படி இருந்தாலும் அவர்கள் அவர்களை சேர்த்து கொள்ளுகிறார்கள். 26இந்த மிருகத்தின் முத்திரையே இங்கேதான் உருவானது என்று மீண்டுமாய் நாம் கண்டோம். அமெரிக்காவின் எண் 13க இருக்கின்றது, அது 13 நாடுகளை குடியிருப்புகளை கொண்டு உருவானது, அது 13 நட்சத்திரங்களையும், 13 கோடுகளையும் கொண்டதான ஒரு கொடியை, அது உடையதாய் இருந்தது. மட்டுமல்லாமல் அது வெளிப்படுத் தினவிசேஷ புத்தகத்தில் 13ம் அதிகாரத்தில் தோன்றுகிறது, அமெரிக்கா எப்பொழுதுமே ஒரு ஸ்திரீயின் தேசமாய் இருக்கின்றது. நாணயத்திலும் கூட ஒரு பெண்ணின் உருவம், அமைக்கப்பட்டிருக்கிறது. ஒத்தை காசு நாணயத்திலும் கூட சிகப்பு இந்திய தலையாய், ஒரு பெண்ணின் உருவம் தான் இருக்கின்றது. நாம் அதை அறிந்திருக்கிறோம், அதில் சரித்திரத்தையும் அறிந்திருக்கிறோம். எல்லா காரியங்களும் சுதந்திர மணி, சுதந்திர சிலை, எல்லாமும் ஒரு பெண்தான். ஒரு ஸ்திரீ, 13ம் எண் புரிகின்றதா. அந்தக் காரியங்களை எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருக்கின்றது. 27நான் தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட் டினாலோ, அல்லது 1933ம் ஆண்டில் கண்ட தரிசனத்தின் படியோ, கடைசி காலத்திற்கு முன்னதாக, ஏழு காரியங்கள் சம்பவிக்கும் என்று நான் முன்னறிவித்தேன். அதில் ஒன்று என்னவென்றால், முசோலினி என்பவன், ஒரு சர்வாதிகாரியைப் போன்று ஆகிக்கொண்டிருந்தான், அவன் சர்வாதிகாரியாக ஆகுகிறான். மட்டுமல்லாமல் அவன் எத்தியோப் பியாவின் மேல் படையெடுத்துப் போய், எத்தியோப் பியாவை கைப்பற்றிக் கொள்வான். அவனுடைய பாதையில் அவன் விழுந்து போவான் என்று ஆவியானவர் கூறினார். அநேக அநேக வருஷங்களுக்கு முன்பு பிரசங்கித் தது, அதைக் கேட்ட யாராவது பண்டையகாலத்தார் இங்கு இருக்கிறீர்களா? அங்கே அந்த ரெட்மேன் ஹாலில். (Redman's Hall) நான் பிரசங்கித்து, அதை கேட்டிருந்தவர்கள் யாராவது இன்று இரவு இக்கட்டிடத்தில் இங்கு இருக்கின்றீர்களா?. அவர்கள் அப்பொழுது, NRA என்ற அமைப்பை உண்டாக்கினர். காலத்திற்கு முன்பு அப்பொழுது உள்ள ஜனாதிபதி ரூஸ்வெல்ட் (Roosevelt's). முதன்முறையாக பதவிக்கு வந்தார். ஒருவர் கூட இல்லையென்று நான் யூகிக்கிறேன். யாராவது ஒருவர் இருக்கிறீர்களா? ஆம், ஆம், அதோ ஒருவர் இருக்கிறார், திருமதி, வில்சன். எனக்கு அவளை நினைவிருக்கிறது, என்னுடைய மனைவி அவளுக்கு பின்னாக உட்கார்ந்திருக்கிறாள். அந்த நாளின் தலைமுறைகளில் பழமையானவர்களில் இரண்டு பேர்கள், இன்னும் விடப்பட்டு இருக்கிறார்கள். அந்த NRA அமைப்பை அவர்கள் அந்த காலத்தில் மிருகத்தின் முத்திரை என்று சொன்னார்கள். நான் அதற்கும், இதற்கும், ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொன்னேன். மிருகத்தின் முத்திரை, இங்கிருந்து வராது அது ரோமாபுரியிலிருந்து தான் வெளிவரும். எனவே அது மிருகத்தின் முத்திரையாய் இருக்க முடியாது, என்று கூறினேன் 28இந்த காரியங்கள் எல்லாம் கூறப்பட்டது என்பதை இப்போது நீங்கள் நினைவில் வையுங்கள். அடோல்ஃப் ஹிட்லர். (Adolf Hitler) ஒரு வினோதமான முடிவிற்கு வருவான் என்று கூறப்பட்டது. அவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல், போர் அறிவிப்பான். அவர்கள் சிமெண்டிலான காங்கிரட்டில் ஒரு பெரிய காரியத்தை கட்டுவான், அதற்குள்ளாக அவர்கள் ஜீவிக்கவும் செய்வார்கள் என்று கூறினேன். சரியாக அந்த இடத்தில் தானே அமெரிக்க ராணுவம், ஒரு பயங்கரமான அடி வாங்கும் என்றும் கூறினேன். அதன் பெயர்தான் சிக்ஃபிரைட் கோடு. (Siegfried Line). அது கட்டுவதற்கு 11 வருடங்களுக்கு முன்னதாகவே நான் அதை அறிவித் தேன். அதுமட்டுமல்லாமல் அவன் ஒரு வினோதமான முடிவுக்கு வருவான் என்றும், அமெரிக்க ராணுவம் முடிவில் வெற்றி பெறும் என்றும் கூறினேன். பின்னும் அங்கே மூன்று இசங்கள் உருவாகும் என்றும், அதாவது நாசிசம், பாசிசம், கம்யூனிசம், இந்த மூன்று இசங்கள் உருவாகும். இந்த மூன்று இசங்களும் முடிவில் கம்யூனிசத்தில் முடிவடையும், கம்யூனிசத்தில் ருஸ்யா எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும், என்றும் கூறினேன். நான் சொன்னேன் விஞ்ஞானம் அவ்வளவு மகத்துவமாகி, மனிதன் அவ்வளவு திறமைசாலியாகி, ஒரு மோட்டார் வாகனமானது ஒரு கோழி முட்டை வடிவத்தில் காணப்படும்படியாய், கண்டுபிடிக்கப்படும். அதன் மேல் பாகமானது ஒரு கண்ணாடி போன்ற வஸ்துவினால் ஆக்கப்பட்டு, அதற்கு இயக்கம் ஸ்டேரிங்சக்கரம் இல்லாமலேயே, வேறு ஏதோ சக்தியினால் அது கட்டுப்படுத்தப்படும். அந்த விதமாய் கூறினேன் அந்த வண்டி இப்போழுது வந்துவிட்டது. 29மீண்டும் நான் சொன்னேன், பின்னர் பெண்களுடைய நெறிமுறைகள் அவ்வளவு சீர்கேடு அடைந்து, அவர்கள் எல்லா தேசங்களுக்கும் ஒரு அவமரியாதையாய், இருக்கப் போகிறார்கள் என்று, அவர்கள் ஆண்களுடைய ஆடையை அணிந்து கொள்வார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய ஆடைகளை கலைந்து போட்டு, முடிவில் அவர்களுடைய உள்ளாடைகளை அணிந்து கொள்வது போன்று வந்து விடுவார்கள் என்று கூறினேன். முடிவிலே அவர்கள் ஒரு அத்தி இலையை அணிந்து கொள்ளும் அளவிற்கு வந்துவிடுவார்கள் என்று கூறினேன். நீங்கள் கவனித்து பார்ப்பீர்களானால், கடந்த மாதம் லைப் பத்திரிக்கையில், அத்தி இலையை அணிந்திருந்த ஒரு ஸ்திரீயின் படத்தை வெளியிட்டார்கள். அது ஒரு புதிய சாயங்கால கவுன், (Nighty). சாயங்காலத்தில் அவர்கள் அணிந்து கொள்வதாய் இருக்கும். அவ்வளவு சல்லாவாக உள்ளே இருப்பதை எல்லாம் பார்க்கலாம், அத்தி இலை மட்டுமே ஒரு குறிப்பிட்ட சரிரத்தின் பாகத்தை மறைக்கிறது. குளிக்கும் ஆடைகள், பட்டை இன்றி அல்லது நாடா இல்லாததால் குளிக்கும் ஆடை மேல்பாகம் அப்படியே காணக்கூடியதாய் இருக்கும். அப்படிப்பட்ட காரியங்கள் எப்படி சம்பவித்தது. பின்னர் நான் கூறினேன், ஒரு மகத்தான ராணியை போன்றோ, அல்லது அப்படி ஏதோ விதமாக, ஒரு பெண் அமெரிக்காவில், நின்றுகொண்டிருக்கிறதை நான் கண்டேன். அவள் பார்ப்பதற்கு அழகானவளாய் இருந் தாள், ஆனால் அவளுடைய இருதயத்திலோ அவ்வளவு பொல்லாதவளாய் இருந்தாள். அவள் தேசத்தை அவள் போகின்ற பாதையிலே போகும் படியாய் செய்தாள். 30பின்னர் முடிவிலே நான் கூறினேன், முடிவிலே அவர் என்னை, கிழக்காக மீண்டும் நோக்கி பார் என்றார். அப்படியாய் நான் பார்த்தபோது, உலகமே வெடித்துவிட்டது போன்று பார்ப்பதற்கு காணப்பட்டது. என்னால் பார்க்கக்கூடிய தூரம் மட்டுமாய், குச்சிகளும், எரிந்துகொண்டிருக்கும் பாறைகளும், பூமியிலிருந்து வெடித்து, தூக்கி எறியப்பட்டு இருந்ததை தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. உலகத்தின் முடிவிற்கு முன்னர் இவைகள் சம்பவிக்க வேண்டியவைகளாயிருந்தது. கூறப்பட்ட ஏழு காரியங் களில் 33 வருடங்களில் ஐந்து காரியங்கள் சம்பவித்து ஆயிற்று. இதோ, நாம் மீண்டுமாய் கடைசி நேரத்துக்கு வந்து விட்டோம். நான் அப்பொழுதே; அந்த ஸ்தாபன முறைமைகளுக்கு எதிராக பேசினேன். இன்னமும் ஒரு சாக்கடை தொட்டியாக எல்லா அசுத்தமும், கோழி தங்குகின்ற இடம் அது என்று, அது நான் விசுவாசிக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை தேவனுடைய சபையில் ஒருபோதும் சேர்த்துக் கொள்வார் என்று, என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், அது முதலாவதாக தேவனுடைய ஆவியினால் பிறந்து, பின்னர் அவருடையது என்று அழைக்கப்படும் முன்னர், அது சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. கிறிஸ்துவின் காணமுடியாத சரீரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாக, அதற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும். 31ஆம், இந்த தொட்டி வெட்டும் முழுமையானது ஸ்தாபனத்தின் ஒரு பரிபூரண பாவனையாய் இருக் கின்றது. ஒரு ஞானம் உள்ள மனிதன் அதை கவனிக் கத்தான் வேண்டும். அவன் ஒரு போதும் அதற்குள்ளாக போகவே மாட்டான். ஏனெனில் தேவன் அதற்கு எதிராக இருக்கிறார் என்றும், அதனோடு கிரியை செய்வதே இல்லை என்றும், காலங்களின் ஊடாக தேவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஒரு தனி மனிதனாய் லூத்தர், வெஸ்லி, ஸ்மித், கால்வின், முதலானவர்களை, எழும்பி ஒரு செய்தியோடு வந்து. அவர்கள் அதை ஸ்தாபனமாக்க துவங்கின போது, தேவன் அதை அப்படியே பரணியில் வைத்துவிட்டார், அதை மீண்டுமாய் ஒரு முறைகூட ஒரு எழுப்புதலிலும் சந்தித்ததே இல்லை. சரீரத்தின் ஊடாக நோக்கிப் பாருங்கள். ஒரு ஸ்தாபனத்தை எடுத்து தேவன் ஒரு எழுப்புதலை அதன்மூலமாக செய்தார் என்று, எங்கேயும் எப்போதும் இருந்ததாக அப்படிப்பட்டதான ஒரு நேரமே இருந் ததில்லை. அடுத்தது சரித்திரத்தின் ஊடாகவும், வேதத்தின் மூலமாகவும், அது தேவனுடைய பார்வையில், ஒரு அசுத்தமான காரியம் என்று நிரூபிக்கிறது. எனவே, அதனோடு நான் ஒன்றையும் செய்ய விரும்பவில்லை, அதனால் நான் எப்போதும் அதற்கு எதிராய் நான் இருக்கிறேன். ஜனங்களை அதிலிருந்து வெளியே கொண்டுவர நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். 32இஸ்ரவேலரை போன்று நாமும் அழைக்கப்பட் டிருக்கிறோம், எனவே உதாரணத்திற்காக நாம் இஸ்ர வேலை நோக்கி பார்க்கிறோம். அவர்கள் அந்த ஊற்றோடு, அவர்கள் நிலைத்திருக்கும் மட்டாய் அவர்கள் சரியாய் தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கென்று, தண்ணீர் தொட்டிகளை வெட்டினபோது, மனிதனினால் ஆக்கப்பட்ட முறைமைகளை பற்றிக் கொண்ட போது, தேவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டார். அவர் அதே காரியத்தை நமக்கும் செய்வார். அவர்கள் அவரை, ஜீவத்தண்ணீர் ஊற்றை புறக்கணித்து விட்டு விட்டார்கள். தேவன் அவர்களுக்கு எதிராய், தேவனிடத்திலிருந்த புகார் அதுதான். நாங்கள் என்ன செய்து இருக்கிறோம், பார்த்தீர்களா என்று அவர்கள் கூறத்தக்கதாக ஏதோ ஒரு காரியத்தை செய்துவருகிறார்கள். 33மோசேயின் பிரயாணத்தின் போது, தேவன் கிருபையினால் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை கொடுத்திருந்தார். அவர்களுக்கு முன் செல்லத்தக்கதாக, ஒரு அக்கினி ஸ்தம்பத்தை கொடுத்திருந்தார். அதை அடையாளங்களினாளும், அற்புதங்களினாளும் ரூபகார படுத்தினார். இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும், கிருபை அவர்களுக்கு அளித்திருந் தது. இஸ்ரவேலருக்கு இன்னும் தேவைகள் இருந்தது. நியாயப்பிரமாணத்தை கண்டார்கள்! நியாயப்பிரமாணத்தை எடுத்துக் கொள்வதற் காக அவர்கள் கிருபையை வேண்டாம்; என்று தள்ளினார்கள். சரியாக அதைத் தான் இன்றைக்கு ஜனங்கள் செய்கிறார்கள். ஒரு ஸ்தாபன ஒழுங்கு முறைமைகளை எடுத்துக்கொள்ள, அவர்கள் வார்த்தையை புறக்கணித்து தள்ளினார்கள். ஏனென்றால், அதனால் அவர்கள் தாங்கள் விரும்புகின்ற காரியத்தை செய்து, அப்படியே தொடர்ந்து போகலாம் என்பதற்காக. ஆனால், கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் அதை செய்ய முடியாது. கிறிஸ்துவைப்போலிருக் கவேண்டுமானால் நீங்கள் சுத்தமாயும், தெளிவாயும் வரவேண்டும். 34ஒரு மனிதரில்லாத முறைமைக்கு, அல்லது வெட்டப்பட்ட தொட்டிக்காக, தன்னில் தானே ஊற்றுக்கன்னை உள்ள கிணற்றை விட்டுவிட்டார்கள். “”இந்த விதமாக யாரோ செய்தார்கள் என்று உங்களால் யூகித்து பார்க்க முடியுமா?“” ஊற்றுக்கன் கிணற்றின் தண்ணீரை குடிப்பதை விட்டு விட்டு, அதற்கு பதிலாக தவளைகளும், பல்லிகளும், முதலானவை நிறைந்திருக் கும் தண்ணீரை, மனிதனால் வெட்டப்பட்ட தொட் டியிலிருந்து, குடிக்கப் போகின்ற ஒரு நபருடைய மன நிலைமையை குறித்து யூகித்து பார்க்க முடியுமா. அறிவுள்ள பிரகாரமாக பார்க்கும்போதும் இது சரியாகப் படவில்லை, ஆனால், ஜனங்கள் சரியாக அதைத்தான் செய்தார்கள். வெட்டப்பட்ட தொட்டிகளில் இருந்து தாங்களாகவே, தொட்டிகளை வெட்டி அதிலிருந்து தண்ணீரை குடிப்பதற்காக வல்லமையையும், உற்பத்தி ஸ்தானமுமான, உண்மையான தேவனுடைய ஊற்றையும், வார்த்தையையும், அவர்கள் விட்டு விட்டார்கள். அப்பொழுது அவர்கள் செய்த அதே விதமாகவே இப்பொழுதும், இவர்கள் செய்கிறார்கள். அவர்கள் என்னை விட்டு விட்டார்கள் என்று அவர் இங்கே எரேமியா - 2- 13, 14ல் தான் கூறுகின்றார், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை அவர்கள் விட்டுவிட்டார்கள். 35இப்பொழுது வெட்டப்பட்ட தொட்டி என்றால் என்னவென்று நாம் பார்த்தோம். அது எதை தன்னிடத்தில் பிடித்து கொண்டு வைக்கிறது என்பதையும் பார்த்தோம், அது எவ்விதமாய் செய்ய பட்டுள்ளது என்பதையும், நாம் பார்த்தோம் அது மனிதனாலான ஒரு காரியமாய் இருக்கின்றது. அது வீட்டின் கூரையின் மேலிருந்து வருகிறது. கீழே விழுகின்ற தண்ணீரானது அசுத்தமான கூரையில் இருந்து விழுந்து, அது கூரையை கழுவிக் கொண்டு, கீழே வருகிறது. மனிதனாலாக்கப்பட்ட தண்ணீர் குழாயின் வழியாக, மனிதனாலாக்கப்பட்ட தண்ணீர் குழாயின் மூக்கின் வழியாக, மனிதனால் உண்டாக்கப் பட்ட வெட்டப்பட்ட ஒரு தொட்டிக்குள் வந்தடை கின்றது. எல்லா அசுத்தமும், கிருமிகள், பல்லிகள், தவளைகள், முதலானவைகள் யாவும், அதற்குள் வந்து ஒன்று கூடுகிறது. அவைகள் அசுத்தமானவைகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது, கவனியுங்கள். நெளியும் சிறு பூச்சியானது, சுத்தமான தண்ணீரில் ஜீவிக்க முடியாது. அப்படி ஜீவித்தால் அது மனிதனை கொன்று போடும். எனவே தேக்கத்தில் அது இருந்து தான் ஆக வேண்டும். 36இன்றைக்கு அநேக ஒட்டுண்ணிகள், இந்தவிதமாக தான் இருக்கின்றது. உங்களால் பரிசுத்த ஆவியின் புத்தம்புதிதான தண்ணீரில் ஜீவிக்க முடியாது. அதன் காரணமாகத்தான் அவர்கள் அவ்வளவு உறுதியாக வார்த்தைக்கு எதிராக இருக்கிறார்கள். அது தன்னைத் தானே மறுத்து கூறுகின்றது, அதனால் ஒன்றுமில்லை என்று கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால், அவைகள் நெளிந்து கொண்டிருக்கும் படியாக ஏதோ ஒரு விதமான தண்ணீர் தேக்கம் அவைகளுக்கு அவசியமாய் இருக் கின்றது சரியா? தவளைகள், பல்லிகள், தலைப் பிரட்டைகள், அது போன்றவைகளுக்கு, அதே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அவைகள் ஜீவிப்பதற்கு ஏதாவது சதுப்பு நிலம், சேறு, தேக்கமான தண்ணீர், இவைகளை... போய் ஆக வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட் டைவைகளில் ஜீவிப்பதே, அவைகளுடைய இயற்கையான சுபாவமாய் இருக்கின்றது. ஒரு மிருகத்தினுடைய சுபாவத்தை மாற்றாமல், நீங்கள் ஒரு மிருகத்தை வித்தியாசமாக மாற்ற முடியாது. ஒரு மனிதனுடைய இயற்கையான சுபாவம் மாறாமல், அவனால் தேவனுடைய வார்த்தையை காண செய்ய, உங்களால் முடியாது. அவனுடைய இருந்ததிலிருந்த அவனுடைய சுபாவம், ஒரு தேவ குமாரனாய் மாறி, பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் திரும்பி வருமட்டாய், வார்த்தையை காண செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை எழுதினவர். 37இன்று நான் என்னுடைய நல்ல நண்பனான டாக்டர், லீவே. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு சிறந்த வேத பண்டிதர் எனவே நான் அவரோடு, விவாதித்துக் கொள்வேன், மிகவும் சாமர்த் தியசாலி, மிகவும் சாமர்த்தியசாலி. ஒரு சமயம் அவர், “என்னிடத்தில் பரிசுத்த ஆவியை பெற்றதற்கு முதல் அத்தாட்சி என்னவென்று கேட்டார், அந்நிய பாஷைகளில் பேசுவதா” என்றார்? அது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர். நான் சொன்னேன், “இல்லை. அதைப் பார்க்க முடியாது” என்றேன். அதற்கு அவர், “அந்த விதமாய் நான் போதிக்கப்பட்டிருந்தாலும், நானும் கூட அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவர், “பரிசுத்த ஆவியை பெற்று கொண்டதற்கு, முதல் அத்தாட்சி என்னவென்று நீர் என்ன நினைக்கிறிர்” என்று கேட்டார்? நான் சொன்னேன், “பரிபூரணமான அத்தாட்சி என்று நான் நினைக்கக் கூடியது அன்பே” என்று சொன்னேன். நாங்கள் அந்த விதமாய் அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் நான் நினைத்தேன். அது மிகவும் அருமையானதாய் காணப்பட்டது, எனவே நான் அதை அப்படியே பற்றிக்கொண்டேன். ஒரு மனிதன் அன்பை உடையவனாய் இருந்தால், அதுவே அத்தாட்சி என்று. ஆனால் ஒரு நாள் கர்த்தர் தரிசனத்தில் என்னுடைய கருத்தை சரிபடுத்தினார். அவர் சொன்னார், “பரிசுத்த ஆவியின் அடையாளம் என்பது வார்த்தையை ஏற்றுக்கொள்வதாகும்” என்று. அன்புமல்ல, “அந்நிய பாஷைகளில் பேசுவதுமல்ல, ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொள்வதுதான். அடையாளமாய் இருக்கின்றது” என்றார். 38அதற்கு டாக்டர், லிவே. என்னிடம் சொன்னார், “அது வேத வார்த்தையின் படியாய் இருக்கின்றது. ஏனென்றால், யோவான்- 14ம் அதிகாரத்தில், இயேசுவானவர் சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, நான் உங்களுக்கு போதித்த இந்தக் காரியங்கள் யாவற்றையும், அவர் வெளிப்படுத்துவார், வரப்போகிற காரியங்களை அறிவிப்பார்” என்று கூறினார். எனவே பரிசுத்த ஆவியின் அசலான அத்தாட்சி எங்கே இருக்கின்றது. அவர் தவறானதை இது மட்டும் எனக்கு கூறியதில்லை. ஏற்றுக்கொள்ள மனதாயிருந் தால், வார்த்தையை விசுவாசிக்க கூடியவனே, பரிசுத்த ஆவியை பெற்றதின் அத்தாட்சியை உடையவனாய் இருக்கிறான். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவீர்கள் என்று, இயேசுவானவர் ஒருபோதும் சொன்னதில்லை. பரிசுத்த ஆவியானவர் வரும்போது இந்தக் காரியங்கள் ஏதாவது செய்வீர்கள் என்று இயேசுவானவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அவர் கூறினார், அவர் என்னுடைய இந்த காரியங்களை எடுத்து, அதை உங்களுக்கு காட்டுவார், வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார், என்று தான் இயேசு கூறியிருக்கிறார். எனவே, இயேசுவானவர் தாமே கூறியுள்ளபடி, அங்கே தான் இருக்கின்றது பரிசுத்த ஆவியின் அசலான அத்தாட்சி. 39எனவே ஜனங்களிடத்தில் இருக்கின்றது, அவர் இன்னமும் ஜீவிக்கின்ற இந்த உணர்ச்சிகள் மற்றக் காரியங்கள் எல்லாம், அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று நீங்கள் பார்க்கலாம். பாருங்கள், அது ஒரு ஸ்தாபன மாகிறது, அல்லது தேங்கியிருக்கும் குளமாகிறது. தேவனுடைய பரிபூரண வார்த்தையின் மேல் இருக்கின்ற, ஒரு ஸ்தாபனமும் அங்கே ஒருபோதும் இருக்காது. அதனால் அதைச் செய்ய முடியாது, ஏன் என்றால் தேவனை நியமிக்கவோ, அல்லது ஸ்தாபனமாக்கவோ முடியாது. இல்லை ஐயா. அது அப்படியாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் வார்த்தையை விசுவாசிக்கின்ற ஒருக்கூட்ட ஆண்களைக் கொண்டு வாருங்கள் அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைத் துவக்கட்டும். முதலில் நடக்கும் காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு வருஷத்தில் ஒரு கூட்ட ரிக்கிகள், அங்கே உள்ளே இருப்பார்கள், உங்களால் அதனோடு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு பிடிப்புக் கிடைத்து விட்டது, இதைக்குறித்து உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. அது தேவனுடைய ஒழுங்கல்ல. அது தேவனுடை யதல்ல எனவே, அந்த காரியம் தீர்ந்து போயிற்று என்று நாம் அறிவோம். அது ஒரு வெட்டப்பட்டத் தொட்டியாகி விட்டது. ஜனங்கள் உள்ளே வருவதற்கும், அங்கத்தினர்களை சேர்ப்பதற்கும் ஒவ்வொ ருவரும், இதன் பேரிலும், அதன் பேரிலும் விட்டுக்கொடுத்து, ஒத்துப் போகக்கூடிய ஒரு இடமாக மாறும். 40இந்த முறைமையானது ஒரு சமயம் இஸ்ரவேல் நாடுகளிலே துவங்கியது, அப்பொழுது அவர்கள் இந்த தொட்டியை வெட்டினார்கள். அங்கே ஒரு மனிதன் இருந்தான், அவனும் ஒரு கூட்டப் பரிசேயர்களும்தான் தண்ணீர் தொட்டிகளை வெட்டினார்கள். அவர்களுக்கு ஏரோது என்று பெயர்க் கொண்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் அதிகாரப்பூர்வமாக தேசாதிபதியாக இருந்தான், அந்த நாட்டின் ஆளுநராக இருந்தான். அவர்களுடைய ஸ்தாபனத்தோடு ஏமாந்துப் போகாத ஒரு மனிதனுடைய காரியத்தை விசாரிக்கும் படியாக வந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான். எந்த ஒரு தீர்க்கதரிசியும், ஒரு போதும் ஸ்தாபனங்களோடும் எந்தவிதச் சம்பந்தமும் உடையவனாக இருக்க மாட்டான். ஆனால் அவர்கள் அதை வெறுத்தார்கள், இந்த தீர்க்கதரிசியானவன் ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிரு ங்கள்; “ஏனென்றால்” தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவ ராயிருக்கிறார் என்று கூறத் துவங்கினான். இவன் கூறுவதை கேட்க அவர்கள் ஒரு பெருமகனை கொண்டு வந்தார்கள். இந்தப் பெருமகன்; (ஏரோது) அவனுடைய சகோதரனின் மனைவியை வைத்துக்கொண்டு அவளை மணம் செய்து கொண் டான். அவன் அந்த மனிதனின் முகத்துக்கு நேராக நடந்து சென்று, என்ன கூறினான். அவர்கள் நினைத்தார்கள், அவன் அவர்களோடு ஒத்துப்போய் இப்பொழுது ஐயா. உமக்கு இங்கே ஒரு நல்ல ஸ்தாபனம் இருக்கின்றது, அப்படியாகத்தான் உனக்கு இருக்க வேண்டும், இன்று நீர் என்னை விசாரிக்கும் படியாய் இங்கே வந்திருப்பதை குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறுவான், என்று நினைத்தார்கள். யோவானோ, “நேராக நடந்து போய், அவனுடைய முகத்துக்கு நேராக நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல” என்று கூறினான். அவன் செய்த முதலாவது காரியம், அவனுடைய பாவத்திற்காக அவனைப் பார்த்து சத்தமிட்டான். 41பாருங்கள், ஸ்தாபனங்கள் தேங்கின தண்ணீர் தடாகங்களை உண்டாக்குகிறது, அங்கே ஆண் பெண்களோடு ஜீவிக்கலாம். அந்தப் பெண்கள் அப்படியாகவே இருக்கலாம், தலைமயிரை வெட்டி கொள்ளலாம், அரைக்கால் சட்டை எதையும் அணிந்துகொள்ளலாம், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் தேவனுடைய வல்லமையினாலான ஒரு அசலான ஊற்றோ அல்லேலூயா. அதனால் அங்கு ஜீவிக்க முடியாது. ஏனென்றால், அது அதனை வெளியே தள்ளுகிறது. நானே ஜீவ தண்ணீர் ஊற்று. அவர்கள் தங்களுக்கென்று தண்ணீர் தொட்டிகளை வெட்டிக் கொள்ளும்படியாக, அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். இப்பொழுது ஒரு ஜீவத்தண்ணீர் ஊற்று, நாம் கண்டறிந்தோம் ஜீவத்தண்ணீர் ஊற்று என்றால், என்ன என்று. ஒரு வெட்டப்பட்ட தொட்டி என்னவென்று நாம் கண்டறிந்தோம் இப்பொழுது ஒரு ஜீவத்தண்ணீர் ஊற்று என்றால் என்ன என்று நாம் பார்ப்போம். அது தன்னில் தானே தண்ணீரை சுரக்கக்கூடிய ஒரு கிணறு. தன்னில் தானே தண்ணீரை சுரக்கும் கிணறு என்ன சகோதரன். பிரன்ஹாம்? அது என்னவென்றால். தண்ணீர் எப்பொழுதும் அதன் அடியிலிருந்து சுரந்து கொண்டு, மேல்நோக்கி வந்து தண்ணீரை வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். எந்த நேரத்திலும் தண்ணீர் பொங்கி பாய்ந்து கொண்டே இருக்கும். தனக்குத் தானே உதவி செய்து கொண்டிருக் கும். எப்பொழுதும் புத்தம் புதிதாகவும், சுத்தமாகவும் இருக்கும், தன்னில் தானே நீர் சுரக்கும் கிணறு, ஜீவத்தண்ணீர் ஊற்றாக இருக்கின்றது. அது மரித்ததும், தேங்கிநிற்கிறதும் அல்ல, அது ஜீவிக்கின்றதாய் இருக்கின்றது. தொடர்ந்து தண்ணீர் மாறிக்கொண்டே இருக்கின்றது, எல்லா நேரத்திலும் ஏதாவது புதிதாகவே மேலே கொண்டு வரும், போய்க் கொண்டே இருக்கும், அதனுடைய மூலதனத்தில் இருந்து அது கொண்டு வந்து கொண்டே இருக்கும். அதனுடைய அடித்தளத்திலிருந்து, அதனுடைய தேவைகளை அது எடுக்கின்றது. ஜீவத் தண்ணீர் ஊற்று இன்னமும் அதன் தண்ணீரை மேலே கொண்டு வந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சுத்தமாக்கிக் கொள்ளும், அது சுத்தமாயும் அசலான சுத்த தண்ணீர், தனக்குத் தானே உதவி செய்யக்கூடியதாய் இருக்கின்றது. மழை பெய்து அதை நிரப்ப வேண்டும் என்று நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, அது பொங்கிக் கொண்டே மேலெழும்பும், தன்னுடைய தண்ணீரை யாவருக்கும் இலவசமாக கொடுக்கிறதாய் இருக்கின்றது. நீங்கள் அதை அழுத்தியோ, சுத்தியோ, முறுக்கியோ, அதனோடு சேர்ந்துகொண்டோ, அதை வெளியே கொண்டு வர வேண்டியதில்லை. அது ஒரு ஜீவத்தண்ணீர் ஊற்று. 42உங்களுக்கே தெரியும் இந்தப் பழைய வெட்டப் பட்ட தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை, மேலே வெளியே கொண்டு வர, நீங்கள் அதைச் சுழற்றி, சுழற்றி, சுழற்றி எடுக்க வேண்டும். அல்லது பம்பை அடித்து கொண்டுவர வேண்டும். அதிலும் கொஞ்சம் தேங்கி நிற்கிற தண்ணீரையே வெளியே எடுக்க, அப்படி செய்ய வேண்டியதாய் இருக்கும். ஹூ! ஆனால் ஒரு ஜீவத்தண்ணீர் ஊற்றோ இலவசமாக தானாகவே அது வெளியே கொடுக்கிறது, அதற்காக நீங்கள் பம்பை அடிக்கவோ, சேர்ந்து கொள்ளவோ, வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை. ஓ,ஓ அந்த ஒன்றிற்காக நான் சந்தோஷப்படுகிறேன். ஆம் ஐயா. அதிலிருந்து கிருமிகளை அப்புறப்படுத்த, அதற்கு வடிகட்டி ஒன்றும் தேவை இல்லை. ஏனென்றால். அது அவ்வளவு ஆழத்திலிருந்து வருகிறது, பாறைக்குள் இருந்து வருகிறது, அங்கே கிருமிகள் கிடையாது. அதற்கு ஒரு கல்வி கந்தை துணி ஒன்றும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, அது சரியே. ஏதோ ஸ்தாபன ஞானமுள்ள மனிதனாலான உலகத்தினால் ஆக்கப்பட்ட முறைமைகளாய் இருக் கின்றது. ஒரு மனோதத்துவ வைத்தியருக்கு முன்பாக உன்னால் பிரசங்கிக்க கூடுமா, கூடாதா என்று அது உனக்குக் கூறும். இப்படிப்பட்ட அசுசியான கந்தைகள் ஒன்றும் அதன்பேரில் தொங்கிக் கொண்டு இருக் கவில்லை. அதன்மேல் அதை நீங்கள் போட்டவுடனேயே, அதை அப்படியே வெளியே தள்ளும். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த கிணற்றால் எப்பொழுதும் தண்ணீரை மேல் நோக்கி தள்ளி கொண்டே இருக்கும். அந்தக் கந்தைகளில் ஒன்றை நீங்கள் அதன் மேல் போடுங்கள், ஏதாவது ஒரு பக்கத்தில் அதை அப்படியே தூக்கி தள்ளிவிடும். அதன்மேல் எந்த ஒரு ஸ்தாபன கந்தையும் வைக்க அங்கே நேரமே கிடையாது. 43அதற்கு எந்த வடிகட்டியோ, எந்த சல்லடையோ, இரைக்கும் எந்திரமோ, எந்த உதரலோ எதுவுமே தேவையில்லை. அது அங்கேயே பொங்கிக் கொண்டும், மேலெழும்பி கொண்டும் இருக்கின்றது. அதை நிறைக்க அதற்கு எந்த மழையும் தேவையில்லை. மலைகள் எழுப்புதல்களாய் இருக்கின்றது. இங்கே அந்த ஜீவ ஊற்றில் இருக்கும் அந்த நீரூற்று, பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். நீங்கள் ஒரு எழுப்புதலை அங்கே எழுப்பிக்கொண்டு வரவேண்டியதில்லை. நீங்கள் ஒன்றையும் அடித்து மேலெழுப்பி கொண்டுவர வேண்டிய தில்லை. நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம், அந்த நீரூற்றண்டை நீங்கள் வர வேண்டியதுதான். அது எப்பொழுதும் நன்மையான, புத்தம் புதிதான தண்ணீரினால் நிறைந்திருக்கும், அதற்கு முடிவே கிடையாது. அது தொடர்ந்து பொங்கிக் கொண்டே இருக்கும். நீங்கள் வெட்டப்பட்ட தொட்டியண்டை சென்று, மழை பெய்து களத்தை நன்றாய் கழுவிக்கொண்டு வந்தால்தான், எங்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை, புரிகின்றதா. என்னே, என்னே, இது அல்ல, தன்னில் தானே சுரக்கும் ஊற்று அது தண்ணீரை நல்ல குளுமையான தண்ணீரை எல்லா நேரத்திலும், மேலே பீச்சுகிறது. நீங்கள் அதின்மேல் நம்பிக்கையாய் இருக்கலாம். சரி. நான் அந்த பழைய வெட்டப்பட்ட தொட்டியை, நான் போய்ப் பார்த்து வருவேன் என்று நீ கூற வேண்டியதில்லை. நாங்கள் அதிலிருந்து வழக்கமாக, தண்ணீர் குடிப்போமானால் நீண்டகாலமாக மழையே பெய்யவில்லை. நான் சொல்லுகிறேன் ஒருவேளை அது காய்ந்து போய் இருக்கலாம். அந்த விதமாக தான் இருக்கின்றது. 44இந்த சில மனிதனாலான முறமைகள். நீங்கள் உள்ளே போகலாம், எப்பொழுதும் அங்கே ஏதாவது பெரிய ஏதோ காரியம் நடந்து கொண்டிருக்குமானால், அங்கே ஏதோ பெரிய விருந்து நடக்கிறது என்றால், அல்லது ஏதோ விதமான காரியம் நடக்கிறதென்றால். ஒரு பெரிய விருந்து முதலானவைகள் நடக்கிறது என்றால், மங்கோ விளையாட்டுகள், அடித்தளத்தில் விருந்துகள் இன்னும் மற்ற காரியங்கள் நடந்தால், அங்கேயே வீடு நிரம்பி இருக்கிறதை காணலாம். ஆனால் நீங்கள் எங்கே போக வேண்டும் என்றால். பொங்கி மேலெழும்பிவரும் ஊற்றண்டைக்கு போக வேண்டும். அங்கே ஜனங்களுக்கு எப்பொழுதும் ஒரு நல்ல குளுமையான தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் அதை சார்ந்திருக்கலாம். பத்து வருடங்களாக அவர்களுக்கு எழுப்புதலே கிடையாதா என்று கூறலாம். நீங்கள் அந்த நீரூற்றண்டையில் ஜீவித்தால், அங்கே எல்லா நேரத்திலும் ஒரு எழுப்புதல் நடந்து கொண்டே இருக்கும். 45அந்த சிறிய வெல்ஷ் மனிதன் சொன்னது போன்று, அல்லது ஒரு சமயம் அங்கே வெல்ஷில் (Welsh Revival) ஒரு எழுப்புதல் நடந்து கொண்டிருந்தது, அப்போது நாட்டின் பெருமிதர் சிலர் வந்திருந்தனர். சிலர் தெய்வீகத்தில், பெரிய டாக்டர் பட்டம் பெற்றவர்களும் அங்கே வெல்ஷுக்கு போய் எங்கே என்று இதையெ ல்லாம் என்னவென்றும், அறிந்துகொள்ளும் படியாய் போயிருந்தார்கள். எனவே அவர்கள் தங்களுடைய திருப்பின கழுத்துப்பட்டைகளும் தொப்பிகளையும், அணிந்துகொண்டு வீதி வழியாய் நடந்துப் போய்க் கொண்டிருந்தனர். அவ்வழியே ஒரு சின்ன காவல்காரன், தன் கையிலிருந்த கோலை சுழற்றிக் கொண்டே, என் மீட்பர் மரித்த குருசன்டை பாவத்திலிருந்து சுத்திகரிக்க அங்கே இருந்து அழுதேன் என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது அங்கேதான் அவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்றே விசில் அடித்து பாடிக்கொண்டே வீதி வழியாக காவல்காரன் போய்க்கொண்டிருந்தான். எனவே அவர்கள் அவனிடம் போய், இவன் ஒரு தெய்வ பக்தியுள்ள மனிதனைப்போல் இருக்கிறான். இவனிடத்தில் நாம் போய் கேட்போம் என்றார்கள். அவர்கள், “அவனை பார்த்து திருவாளரே” என்றார்கள். அவன், “அவர்களைப் பார்த்து ஆம் ஐயா” என்றான். அதற்கு அவர்கள், “நாங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து வருகிறோம். ஒரு பிரதிநிதிகள் குழுவாய் வந்திருக்கிறோம். வெல்ஷ் எழுப்புதல் என்பதைப்பற்றி துப்பறியும் படியாய், நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் தெய்விகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், நாங்கள் அதைக் காண வேண்டுமென்று இங்கு வந்திருக்கிறோம்” என்றார்கள். அவர்கள், “அந்த எழுப்புதல் எங்கே எந்த இடத்தில் நடக்கிறது என்று” கேட்டார்கள். அதற்கு அவன், “ஐயா நீங்கள் வந்து விட்டீர்கள். நான்தான் அந்த வெல்ஷ் எழுப்புதல் ஆமென்” என்றான், “வெல்ஷ் எழுப்புதல் எனக்குள்ளாக இருக்கின்றது, இங்கேதான் அது இருக்கின்றது” என்று கூறினான். 46ஜீவத்தண்ணீர் ஊற்றண்டை ஜீவிக்கும் போது அந்த விதமாகத்தான் உனக்கு இருக்கும். அது எல்லா நேரத்தும் ஜீவித்துக் கொண்டும், மேலுக்கு மேல், மேலுக்கு மேல், மேலுக்கு மேல், பொங்கிக் கொண்டுமாய் இருக்கும். அதற்கு முடிவே இல்லை. நமது மழை பெய்து அதிக காலமாயிருந்ததால், தண்ணீர் இருக்கிறதா என்று போய் பாருங்கள் என்பது அதுவல்ல அது. அது அந்த ஜீவத்தண்ணீர் ஊற்றாக இருக்கின்றது, நான் கூறுவது போன்று அது அதன் தண்ணீரை இலவசமாக கொடுக்கிறது. அதைக் கண்டறிய நீங்கள் ஒன்றும் அதின்மேல் ஒரு கந்தைகளை போட வேண்டியதில்லை. அவனைப் பிரசங்கிக்க அனுப்புவதற்கு முன்பாக சில கல்வி கந்தைகளை போட்டு, அவன் வார்த்தைகளுக்கான சரியான உரிச்சொற்களை (Adjectives) கூறுகிறானா அவர் சரியாக உச்சரிக்கிறானா, அவன் பெயர் சொல் பிரதிப் பெயர் சொல் முதலானவைகளை சரியானவிதமாய் உச்சரிக்கிறானா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை அநேகருக்கு தாங்கள் யார் என்றே அநேகருக்கு தெரியாது, ஆனால் அவர்கள் அதே விதமாக அந்த நீர் ஊற்றில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். 47பாருங்கள், அதே விதமாக. அதனை நிறைத்துக்கொள்ள உள்ளூர் மழை அவசியமில்லை, அல்லது அதற்கு உள்ளூர் எழுப்புதல்கள் அவசியமில்லை, அதனுடைய வல்லமைக்காக அதை செய்ய வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது, அது சுத்தத்தன்மை அதற்குள்ளாகவே இருக்கின்றது. அங்கேதான் வார்த்தை இருக்கின்றது, அதினுடைய சொந்த வல்லமை, ஒரு மனிதன் அதனை அவனுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அதனுடைய சுத்தத்தை கலப் பில்லாமையை தனக்குள்ளே கொண்டு இருக்கின்றது. அதனுடைய வல்லமையை அது உடையதாய் இருக்கின்றது. அது சரியாக வார்த்தையிலே இருக்கின்றது. ஜீவனை மலரச் செய்கிறது. இஸ்ரவேலர் அதைவிட்டு விலகிப் போய் துன்பத் துக்குள்ளாவார்கள், அவர்கள் அதை விட்டு விலகி போகும்போதெல்லாம் அவர்கள் துன்பத்துக்குள்ளா வார்கள். இப்பொழுது நாம் செய்தது போன்று, எழுப்புதல் அதைவிட்டு விலகும்போது அதன் பிறகு அது உதவாதது, அது தனக்கென்று சில கிணறுகளை, அல்லது தேங்கி நிற்கும் தொட்டிகளை வெட்டிக்கொண்டு அதற்கு போகிறார்கள். 48ஆனால் அவர் எல்லா நேரத்தும் அவர்களுக்கு உதவி செய்தார். சிவந்த சமுத்திரத்தண்டை அவர்க ளுடைய முறுமுறுப்பு, அப்படியாய் அவர்கள் முறுமுறுத் தபோதும், அது எல்லாவற்றின் மத்தியிலும் அவர் வாக்களித்திருந்தார். அவர்களுக்கு ஒரு வாக்கு அளித்தார். நாம் அதை நோக்குகின்ற விதமாக அங்கேயே அவர்களை திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், அவறோ அங்கே கொண்டுபோய் சேர்ப்பதாக அவர் வாக்களித்து இருந்தார். அவர் என்ன செய்தார்? அவர் அந்த இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு அக்கினி ஸ்தம்பம் இன்னும் மற்ற காரியங்கள் யாவையும், அவர்களுக்கு கொடுத்து ஒரு ரூபகாரத்திற்காக அவர்களுக்கு தீர்க்கதரிசியை கொடுத் தார். அவர்கள் அவர்களை சிவந்த சமுத்திரத்தண்டைக்கு கொண்டு சென்றனர், எப்பொழுதும் அதற்கு எதிராக இருந்தால் துன்பம்தான் வரும். இதோ பார்வோனும் நம்முடைய சேனையும் வருகிறது, தேவன் என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் தேங்கி கொண்டிருந்த தொட்டியை சிவந்த சமுத்திரத்தை திறந்து பிளந்து விட்டார். சவக்கடல் என்பது உலகத்திலேயே ஜீவனற்ற ஒரு காரியம், அது உண்மையிலேயே மரித்ததாய் இருக் கின்றது, அது தேக்கமாய் இருக்கின்றது, அதில் ஏதும் ஜீவிக்க முடியாது. அவர் அதை திறந்து அடுத்த கரையிலே அவர்களை விடுவித்தார். அது போன்றதான ஒரு காரியத்தினால், கட்டப்பட்டு இருக்கவேண்டியதல்லாத ஒரு இடத்துக்கு அவர்களை கொண்டு சென்றார். 49வனாந்தரத்தில் தொட்டிகளை நம்பி இருக்க முடியாது என்று கண்டறிந்தனர். அவைகள் வற்றிப் போயிருந்தன, அவர்கள் ஒரு துறவை விட்டு இன்னொரு துறவுக்கு போவதை அவர்கள் கண்டறிந்தார்கள். அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் வறட்சியாள் மரித்துப் போகும் படியாய் இருந்தார்கள். இங்கே இருக்கின்ற தொட்டிக்கு ஒரு குளத்திற்கு போவார்கள், அங்கே அது வற்றிப்போய் இருக்கும். அவர்கள் இன்னொரு இடத்திற்கு போவார்கள். அங்கேயும் அது வற்றி போயிருந்தது, தண்ணீர் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூட அவர்களால் சிந்திக்க கூடாமல் இருந்தார்கள். பின்னர் அவர்கள் பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்கக்கூடாத இடத்தில் தண்ணீரை அவர்கள் கண்டார்கள். அது ஒரு கன்மலைக்குள்ளாய் இருந்தது, அது ஒரு கன்மலைக்குள்ளாய் இருந்தது. தண்ணீரையே எதிர்பார்க்க முடியாத ஒரு இடத்தில் வறண்டு போன பாலைவனத்தின் மத்தியில், காய்ந்து போன கன்மலைக் குள் மனிதன் தண்ணீரை கண்டான். ஆனால் பாருங்கள், தேவன் அந்த விதமாகத்தான் காரியங்களைச் செய்கிறார். மிகவும் எதிர்பார்க்க முடியாத இடத்திலே மிகவும் வழக்கத்திற்கு மாறாத விதத்திலே தேவன் கிரியை செய்கிறார். அவ்விதமாக தான் எல்லா நேரத்திலும் நமக்கு உண்டாயிருந்தது. 50ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஸ்தாபனம் நமக்கு உண்டாயிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக் கிறார்கள். அவர்கள் யாவருமாய் ஒன்றுகூடும் படியாய் செய்து அங்கே எல்லாரும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், முதலான காரியங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து எல்லாம் இந்த விதமாக இருந்து, ஒரு எழுப்புதல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். சில சமயங்களில் தேவன் முதல் எழுத்தே (Adjectives உரிச்சொற்கலே) தெரியாத ஒரு சில வயதான ஒருவனை எடுத்து, வலது இடது கரங்களுக்கு வித்தியாசம் தெரியாத படிப்பறிவில்லாத ஜனங்கள் மத்தியில் ஒரு எழுப்புதலை எழும்ப செய்து உலகத்தையே அமைக்கச் செய்ய அவரால் கூடும். யோவானின் காலத்தில் அவர் அதை செய்தார். தீர்க்கதரிசிகளின் காலத்தில் அவர் அதைச் செய்தார். அவர்களில் ஒருவர் கூட நமக்குத் தெரிந்த மட்டில், கல்வி கற்றதே கிடையாது. ஆனால் அப்படிப் பட்டவர்களை தேவன் பற்றிப்பிடித்து அவர்களைக் கொண்டு ஏதாவது காரியத்தை செய்தார். 51இந்த கன்மலையிலிருந்து தான் தண்ணீர் புறப்பட்டு வந்தது. அவரே அந்தக் கன்மலையாய் இருக் கிறார். அந்தக் கன்மலைக்கு அவர் கட்டளையிட்டு அடிக்கப்பட வேண்டியதாய் இருந்தது, அவர் மிகுதியான, சுத்தமான புத்தம் புதிதான, தெளிந்த தண்ணீரை யாவரும் குடிக்கும் படியாய் கொடுத்தார். அதிலிருந்து தண்ணீரை குடித்த அனைவரையும் அவர் இரட்சித்தார். யோவான்-3,16க்கு அது ஒரு பரிபூரண இணையாய் இருக்கின்றது. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். தேவன் அந்த கன்மலையை கல்வாரியின் மேல் அடித்தார். நம்முடைய ஆக்கினை தீர்ப்பு அவர் மேல் விழுந்தது அவரிடத்தில் இருந்து ஜீவ ஆவி புறப்பட்டு வந்து அது உனக்கும் எனக்கும் நித்திய ஜீவனை கொடுக்கும். அங்கே இந்த வனாந்தரத்திற்கு அது ஒரு, அதைப் பற்றின ஒரு பரிபூரண உபானமாய் இருக்கின்றது. 52அவர்கள் ஒன்றும் இருக்கவோ தோண்டவோ அழுத்தி மேலே கொண்டுவரவோ, அல்லது எந்த காரியமும் செய்ய வேண்டியதில்லை வெறுமனே தேவனால் அருளப்பட்ட பாதையில் இலவசமாக பங்கு கொள்ள வேண்டியதுதான். அப்பொழுது அவர்கள் ஒரு தடாகத்தில் இருந்து அதை தோண்டி எடுக்க வேண்டியதில்லை, அவர்கள் அது ஒரு வாலியை கொண்டு வெளியே கொண்டு வர வேண்டியதுமில்லை, அதை வெளியே கொண்டுவர எந்த ஒரு ராட்டினமும் அவர்களுக்கு தேவை இல்லை, அவர்கள் வெறுமன அதில் பங்கு கொள்ள வேண்டியது தான். இருப்பதெல்லாம் அவ்வளவுதான். நீங்கள் எந்த ஒன்றோடு சேர்ந்து கொள்வதில்லை, நீங்கள் பீடத்தண்டை இறங்கி ஏதோ ஒரு காரியம் செய்ய வேண்டியதில்லை, அதை அழுத்தி அழுத்தி வெளியே கொண்டுவர வேண்டியதுமில்லை. நீங்கள் திரும்பி திரும்பி திரும்பி எதையோ சொல்லி ஒரு குழப்பமான பாஷைக்கு வர வேண்டியதுமில்லை, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் இலவசமாக அவர்கள் தேவனுடன் அருளப்பட்ட பாதையில் பங்கு கொள்ளுங்கள், அதை பம்படிக்கவோ அழுத்தவோ எந்த ஒரு காரியமும் செய்ய வேண்டிய தில்லை இலவசமாக அதில் நீங்கள் பங்கு கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை அதில் பங்கு கொள்ள வேண்டியதுதான். அது அதை விசுவாசிப்பது தான் நான் அதற்கு சொல்லக்கூடிய தெல்லாம், அவ்வளவுதான். அதற்காகவேண்டி அவர்கள் ஒன்றையும் செய்ய வேண்டியது இல்லை அதற்காக தோண்ட வேண்டிய அவசியமும் இல்லை, அவர்கள் ஒருபோதும் கீழே இறங்கி அதற்காக இரவெல்லாம் சத்தமிட வேண்டிய தில்லை, அவர்கள் அதில் பங்கு பெற்றார்கள். அது அடிக்கப்பட்டு ஆயத்தமாய் இருந்தது. அது சரி. 53இங்கே பின்னால் இருக்கும் மலையில் உட்கார்ந்துக்கொன்டிருக்கிற ஒரு மனிதனை நான் இப்பொழுது நோக்கி பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு பழைய காலத்தின் கடை ஒன்றில் ஒரு மேலாயர் மூலமாக அவரிடம் நான் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு நினைவு இருக்கின்றது. அப்பொழுது அவர், “நான் அதற்கு தகுதியானவன் அல்ல” என்றார். நீர், “தகுதியுள்ளவர் அல்ல என்று எனக்கு தெரியும்” என்றேன். நானும் கூட தகுதியற்றவன் என்றேன். ஆனால் நான் சொன்னேன், “நீங்கள் என்னவோ அதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள், உன்னுடைய நிலமையை பார்ப்பதை நிறுத்தி, அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நோக்கி பார்” என்றேன். அவர் சொன்னார், “என்னால் மட்டும் இந்த சிகரெட்டுகளை விட்டுவிட முடிந்தால், சகோதரன். பிரன்ஹாம். நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பேன்” என்றான். நான் சொன்னேன், “அவைகளை நீ விட்டுவிட வேண்டாம், முதலாவது நல்லவனாய் அதற்குப் பின்னர் அவரண்டை வர முயற்சிக்கிறாய், அவர் நல்ல மனிதனை இரட்ச்சிக்கும் படியாய் அவர் வரவே இல்லை, தாங்கள் கெட்டவர்கள் என்று அறிந்திருந்த, கெட்ட மனிதனை இரட்சிக்கவே அவர் வந்தார்” என்றேன். அதற்கு அவர், “அப்படி என்றால்” என்றார். நான் சொன்னேன், “கவனியுங்கள் உங்களுக்கு நரகத்துக்குப் போக விருப்பமில்லை விருப்பமா? அவர் இல்லை“ என்றார். நான் சொன்னேன், “நீர் போக வேண்டியதும் இல்லை, நீ அங்கே போகக் கூடாதபடியாய் அவர் மரித்தார்” என்றேன். அதற்கு அவர், “அப்படியானால் நான் என்ன செய்யவேண்டும்” என்றார். நான் அதற்கு, “ஒன்றும் இல்லை. அது அவ்வளவு சாதாரணமானது” என்றேன். அதற்கு அவர், “என்னால் மட்டும் முடிந்தால்” என்றான். நான் சொன்னேன், “அப்படியானால் நீ திரும்பவும் சிகரெட்டுக்கே போகின்றாய், அந்த சிகரெட்டை குறித்து சிந்திப்பதை விட்டு விடு, அவரைக் குறித்து நினைத்துக் கொள் அவர் என்ன செய்தார் அவர் என்னவாய் இருக்கிறார், நீ என்னவா இருக்கிறாய் என்றல்ல, நினைவிருக்கட்டும். நீ நல்லவன் அல்ல இருந்ததும் அல்ல இருக்கப் போவதும் அல்ல. ஆனால் அவர் என்னவாய் இருக்கிறார் அவரேதான். இப்பொழுது நீ செய்ய வேண்டிய ஒரே காரியம் அவர் கீழே உன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு இருப்பாரேயானால் நீ விருப்பத்தோடே அவர் என்ன செய்தாரோ அதை ஏற்றுக்கொள். நீ செய்ய வேண்டியது ஒரே காரியம் அதை” ஏற்றுக்கொள். அவர் சொன்னார், “ஏன்? அது மிகவும் சாதாரணமாயிற்றே நான் அதை செய்வேன்” என்றார். 54நான் சொன்னேன், “இதோ இருக்கிறதே ஓடை” என்றேன். புரிகின்றதா. நான் அவரை இது மட்டுமாய் கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர்களில் ஜனங்களில் சிலர் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர்,. நான் அதை செய்ததற்காக அவர்கள் என்னை வேடிக்கையாய் பார்த்தார்கள், ஆனால் நான் செய்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் அந்த மனிதனில் ஏதோ காரியத்தை கண்டேன். அது அசலானதாய் இருந்தது. என்னால் அதை உள்ளே பார்க்க முடிந்தது நான் அவரைக் கொண்டுபோய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். நான் அதை செய்தபோது அதன் பின்னர் நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல நான் ஒரு நாள் அவருடைய மகனுடைய வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் தரிசனத் தில் ஒரு பெரிய மரமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் முறிந்து விழ, அந்த மனிதன் கீழே விழுந்து அவருடைய முதுகில் ஏறக்குறைய முறித்துக் கொண்டான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அன்று இரவன்று அதுதான் அவனுடைய சிகரெட்டிற்கு முடிவு என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். எனவே அடுத்த நாள் அவருக்கு சிகரெட்டுகள் தேவையாயிருந்தது. நான் சொன்னேன், “நான் அவருக்கு ஒரு பெட்டி நிறைய சிகரெட்டுகள் வாங்கி அதை அவரிடம் கொண்டு போவேன். நீங்கள் நின்று கவனித்து அவருடைய சிகரெட் பழக்கம் முடிந்துவிட்டது என்பதை பாருங்கள்” என்பேன். அது முதற்கொண்டு அவர் சிகரெட்டையும் கூட பிடிக்கவில்லை, ஒரு சிகரெட்டும் அவருக்கு தேவையுமில்லை, அது தேவன். பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது காரியம் நீங்கள் அந்த ஊற்றன்டைக்கு வரவேண்டும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந் தவர்களாய் நீங்கள் அந்த தண்ணீர் அண்டைக்கு வந்து தான் ஆக வேண்டும். அதைத்தான் அவர் உங்களுக்காக செய்திருக்கிறார். நீங்கள் தோன்ட வேண்டியதில்லை, நீங்கள் பம்படித்து வெளியே கொண்டுவர வேண்டிய தில்லை, நீங்கள் இதை விட்டுவிட அதை விட்டுவிட வேண்டியதில்லை, நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் அங்கே போய் அதை பானம் பண்ணுங்கள் அவ்வளவுதான். நீங்கள் தாகமாய் இருந்தால் பானம் பண்ணுங்கள். 55இப்பொழுது அவரே அந்தக் கன்மலை, நமக்காக தேவன் அவரை அடித்தார் ஒரு மிகுதியான கலப்பில்லாத சுத்தமான தண்ணீரை கொடுத்தார். அவர் இன்னமும் இன்றும் விசுவாசிக்கிற யாவருக்கும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அவருடைய ஜனங்களாகிய நமக்கு இது அவருடைய கிருபையாய் இருக்கின்றது. அங்கே இருந்தது போலவே ஏதோ காரியம் இங்கே இருக்கின்றது. இன்றைய ஜனங்கள் போன்று அதாவது என்ன கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிரதியாக எந்த சேவையும் கொடுக்க விரும்பாதவர்களாய் இருக் கிறார்கள். கன்மலையிலிருந்து தண்ணீரை குடிக்க இஸ்ரவேலர் ஆயத்தமாய் இருக்கிறார்கள். ஆனால் அவர் கூறினதான அவருடைய சேவையை தேவனுக்கு கொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. அவர் எப்பொழுதுமே நமக்கு ஒரு சேவையை செய்துகொண்டு இருக்கிறார். உங்களுக்கே தெரியும் அவரில்லாமல் நம்மால் சுவாசிக்க கூட முடியாது. தேவனுடைய சேவை இல்லாமல் நம்மால் சுவாசிக்க முடியாது. அந்த விதமாகத்தான் நாம் அவர் பேரில் நம்பிக்கையாக இருக்கிறோம். இருந்தபோதிலும் அவருக் காக நாம் எதையாவது செய்ய வேண்டியதாய் இருந்து, அதை செய்ய முயற்சித்தால் சற்றேறக்குறைய இரண்டாக நம்மை உடைக்கிறது. அவர் நம்மை ஏதோ காரியம் செய்யவும் யாரையோ போய் பார்க்கவும் யாருக்கோ போய் ஜெபிக்கவும் யாருக்கோ உதவி செய்யவும் அவர் நம்மை கேட்கிறார். அதை செய்வதற்கு அது நம்மை ஏறக்குறைய உடைத்து விடும்போல் இருக்கின்றது. ஆனால் அவருக்கு சேவையாக நாம் ஒன்றையும் செய்ய விரும்புகிறது இல்லை. 56அவருடைய குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் வார்த்தையை, என்னை விட்டு விட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு வெடிப்புள்ள தொட்டியை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் என்னை, ஜீவ ஊற்றை, ஜீவத்தண்ணீர் ஊற்றை விட்டுவிட்டார்கள். அதற்கு பதிலாக தேங்கி நிற்கிற தொட்டியிலிருந்து குடிக்க வாஞ்சிக்கிறார்கள், அதை உங்களால் சற்று யூகித்து பார்க்க முடிகிறதா. இங்கே ஒரு தன்னில் தானே சுரக்கும், சுண்ணாம்புக்கல் தண்ணீர் உடைய ஒரு ஊற்று இருக்கின்றது. பாறைகளின் மத்தியில் ஊடாக கீழே உள்ள மணலில் இருந்து தண்ணீரை விழியே பொங்கி தள்ளுகிறது. தண்ணீர் அவ்வளவு குளுமையாயும், அருமையாயும் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதை விட்டுவிட்டு கூரையின் மேலிருந்து சுற்றியுள்ள களம், வீடு, முதலானவைகளிலிருந்து அசுத்தத்தை எல்லாம் அடித்துக் கொண்டு வந்து, வெட்டப்பட்ட தொட்டியில் இருக்கும் தண்ணீரை ஒருவன் குடிக்கிறான் என்பதை உங்களால் சற்று யூகித்து பார்க்கத்தான் முடியுமா. அப்படிப்பட்ட தண்ணீரை தொட்டிக்குள் வந்து சேர்க்கிற சாக்கடையின் கழிவு தண்ணீர் களத்தில் வரும் குதிரையின் லாயத்தில் விழும் தண்ணீர் இவை எல்லாமுமாய் தொட்டியில் வந்து சேரும். அந்த தன்னில் தானே சுரக்கின்ற ஊற்றின் தண்ணீரை குடிக்காமல், இந்த தொட்டியிலிருந்த தண்ணீரை விரும்புகிறோம் என்றால், எப்படியாய் இருக்கின்றது. அங்கே ஏதோ சிந்தை கோளாறு அந்த நபருக்கு இருக்கத்தான் வேண்டும் அது சரி. 57தலைமயிரை வெட்டி கொள்ளுதல் குட்டையான கால்சட்டையை அணிதல், முகத்துக்கு வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், இந்தவிதமான மற்ற காரியங்களை அனுமதிக்கும், சில விதமான நிகழ்ச்சிகள் இவைகளை யெல்லாம் கொண்டிருக்கும், சில விளையாட்டுகள் முதலானவைகளுக்கு போகாமலம் அப்படிப்பட்ட வைகளெல்லாம் ஒன்றுமில்லை என்கிற ஸ்தாபனங்களை, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தெரிந்து கொள்ளும்போது, வெட்டவும் அருக்கவும் செய்கின்ற தான படையானது தேவனுடைய வார்த்தையை போதித்து, ஸ்திரிகளிலிருந்து நல்ல சீமாட்டிகளையும், சரியான உடைகளை அணியவும் சரியான விதமாய் நடந்து கொள்ளவும், சிகரெட்டுகல், புகையிலை, சத்தியம் பண்ணுதல், சபித்தல், பொய் சொல்லுதல், திருடுதல், முதலானவைகளையும். உலகம் யாவையும் உன்னிலி ருந்து எடுத்துப்போட்டு பரிபூரணமான திருப்தியான ஏதோ காரியத்தை உனக்கு கொடுக்கக் கூடியதுமான அதைக்காட்டிலும் அவைகளை நீ விரும்புகிறாய். ஆறுதல்களுக்காக ஏன் அப்படிப்பட்ட ஒரு காரியத்துக்கு ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஏன் போகிறார்கள். அவைகளிலிருந்து எப்படி உங்களால் ஆறுதலை பெற்றுக் கொள்ள முடியும். 58தேங்கிக்கிடக்கும் தொட்டியின் தண்ணீரீலிருந்து உங்களால் எப்படி ஒரு புதிதாகக் குடிக்க முடியும், ஒரு நபர் அப்படியாய் செய்ய வேண்டுமா, தன்னில் தானே சுரக்கும் ஊற்றையுடைய கிணறு இருக்கும்போது, ஒரு நபர் தண்ணீர் குடிக்க தேங்கிக்கிடக்கும் தொட்டி அண்டை போவானானால் அந்த மனிதனுடைய சிந்தையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர் அல்லவா. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ ஆறுதலுக்காக அப்படிப்பட்ட இடத்தை தேடி போவானேயானால் ஆவிக்குரிய பிரகாரமாக அங்கே அந்த நபருக்குள் ஏதோ கோளாறு இருக்கின்றது, அவர்களுக்கு வார்த்தை வேண்டியதில்லை, அவர்களுடைய சுபாவம் இன்னமும் அவர்கள் ஒரு தவளையாய் அல்லது ஒரு தலைப்பிரட் டையாய் அல்லது ஏதோ காரியமாய்தான் இருக்கின்றது என்பதை காட்டுகிறது. தேக்கமான தண்ணீரை விரும்புகின்ற தான ஏதோ ஒன்றை போன்ற சுபாவம் உடையதாய் இருக்கின்றனர். ஏனென்றால் அப்பேர்பட்ட வகைகளால் புத்தம் புதிதான தண்ணீரில் குளத்தில் ஜீவிக்க முடியாது. அவைகள் அதை செய்ய முடியாது, அது புது தண்ணீராய் இருக்கின்றது, அவைகள் அதை செய்ய முடியாது. 59இப்பொழுது குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் அந்த நீருற்றை விட்டு விட்டார்கள் என்பதே, இன்றைக்கும் அவர்கள் அதே காரியத்தை செய்தார்கள். இப்போழுது கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயை நோக்கி பாருங்கள். அவள் யாக்கோபின் கிணறு மட்டுமாய் வந்தாள். காலமெல்லாம் அந்த யாக்கோபின் கிணற்றிலிருந்துதான் தண்ணீரை கொண்டு போனாள். ஆனால் யாக்கோபின் தொட்டி அதை ஸ்தாபனம் என்று அந்த விதமாக அதை அழைப்போமா? ஏனென்றால் அப்பொழுது அவன் அதைப்போன்று மூன்று தொட் டிகளை வெட்டினான், இந்தக் கிணற்றையும் அவன் தான் வெட்டினான். அவள் ஒரு பெரிய கதையை உடையவளாய் இருந்தாள், இது என் தகப்பனாகிய யாக்கோபு தோண்டின கிணறு என்று சொன்னாள். அந்தக் கிணற்றிலிருந்து தான் யாக்கோபும், அவருடைய ஆடு மாடுகள் முதலானவைகளும் தண்ணீர் குடித்தன அது போதாதா? அவர் சொன்னார், “நீ அதிலிருந்து எடுக்கும் தண்ணீரை குடித்தால் மறுபடியும் தாகம் உண்டாகும் மீண்டும் இங்கே தண்ணீர் கொண்டு போக வர வேண்டியதாய் இருக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரோ, அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊறுகின்ற ஊற்றாய் இருக்கும், அதை கொண்டு போக மறுபடியும் வரவேண்டியதில்லை, அது உனக்குள்ளாகவே இருக்கின்றது” என்றார். 60கவனியுங்கள், ஆனால் அவள் எதிர் நோக்கிக் கொண்டிருந்த ஒரு வேதாகம அடையாளத்தின் மூலமாக, தன்னுடன் பேசியது ஒரு வேதாகம ஊற்று என்பதை அவள் கண்டுபிடித்த பின்னர். அவள் அந்த யாக்கோபு ஸ்தாபன ஒழுங்கு முரைகளை விட்டு விட்டு அதனண்டை வரவே இல்லை ஏனென்றால், அவள் உண்மையான கன்மலையை கண்டுபிடித்து விட்டால், புரிகின்றதா. அவள் பட்டணத் திற்குள்ளாக ஓடினாள், அவளுடைய பாவம் நீக்கப்பட்டு விட்டது, இனி அவள் ஒரு அசுசியான ஸ்திரி அல்ல, அவள் சொன்னாள், “நான் யாரை கண்டு கொண்டேன் என்று வந்து பாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்கு சொன்ன மனிதனை பாருங்கள் அவர் கிறிஸ்து தானோ” என்றாள். அந்த தொட்டி ஒருகால் போதுமானதாய் இருந்திருக்கலாம் அதினுடைய பிரயோ ஜனத்தை அது நிறைவேற்றியது. இப்பொழுதோ அவள் அந்த உண்மையான ஊற்றண்டை இருக்கிறாள், அந்தப் புதிய ஊற்று திறக்கப்படுமட்டாய் அந்த தொட்டி போதுமானதாய் இருந்தது, ஆனால் அந்தப் புதிய ஊற்று வந்தபோதோ அந்த தொட்டி தன் பெலனை இழந்து விட்டது. தண்ணீர் குடிப்பதற்கு ஒரு மேலான இடத்தை அவள் கண்டு கொண்டாள். 61ஒரு மேலான இடம் இருக்கின்றது, ஒரு மேலான இடம் இருக்கின்றது, அது கிறிஸ்துவே. கூடார பண்டிகையின் கடைசி நாட்களில் இயேசுவானவர் பரிசுத்த யோவான்-7-37,38ல் கூறுகிறார். ஒருவன் தாகமாயிருந் தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்று சத்தமிட்டார். அவர்கள் எல்லாரும் களிக்கூர்ந்து கொண்டு இருந்தார்கள். அங்கே பீடத்தின் கீழே இருந்து மேலெழும்பி வரும் சிறிது தண்ணீர் அவர்களுக்கு இருந்தது, அங்கேதான் அவர்கள் எல்லாரும் தண்ணீரை குடித்துக்கொண்டு பண்டிகையை கொண்டாடிக்கொண்டு, எங்கள் பிதாக்கள் வனாந்தரத் தில் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து குடித்தார்கள் என்று கூறினார்கள். பாருங்கள் ஆகவே ஒரு தொட்டியை வெட்டி, எங்கிருந்தோ சிறுது தேங்கின தண்ணீரை அதற்குள்ளாக பாய்ச்சி அதை தேவாலயத்துக்கு கீழ் இருந்து பீய்ச்சும்படி செய்தார்கள். அவர்கள் யாவரும் அந்த தண்ணீரில் சூழ்ந்துகொண்டு குடித்துவிட்டு பல வருஷங்களுக்கு முன்பாக எங்களுடைய பிதாக்கள் வனாந்தரத்தில் இந்த தண்ணீரை குடித்தார்கள் என்று கூறினார்கள். இயேசு சொன்னார், “வனாந்தரத்திலே இருந்ததான அந்த கன்மலை” நானே. ஆனால் அவர்களோ, “நாங்கள் பரலோகத்திலிருந்து வந்த மன்னாவை புசித்தோம் தேவன் அதை பெய்ய பண்ணினார்” என்றார்கள். அவர் சொன்னார், “அந்த மன்னா நானே” என்று. அந்த நீருற்றாகிய அவர் அவர்கள் மத்தியில் நின்று கொண்டு இருந்தார். அந்த ஜீவ அப்பமாகிய அவர் அவர்கள் மத்தியில் நின்று கொண்டு இருந்தார். அவர்கள் இன்னமும் அதை வேண்டாம் என்கின்றனர், அதைவிட எங்களுடைய தண்ணீர் தொட்டிகள் எங்களுக்கு போதும் என்றார்கள். ஏனென்றால் மனிதன் இதை வெட்டினான் அதையோ தேவன் அனுப்பினார், அதுதான் சரியான படியான வித்தியாசமாக இருக்கின்றது, அவர்களாகவே தங்களுக்கென்று தொட்டிகளை வெட்டிக் கொண்டார்கள். ஒருவன் தாகமாய் இருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன் என்று கூறினார். அவரே அந்த ஊற்றாய் இருக்கிறார். வேத வாக்கியங்கள் கூறினது போன்று, அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீர் உள்ள நதிகள் ஓடும். ஓ அவரே அந்த தன்னில் தானே சுரக்கும் ஊற்று. அவருடைய உள்ளத்தில் இருந்து அல்லது அவருடைய உள்ளான மனுஷனிலிருந்து, ஜீவத்தண்ணீர் உள்ள நதிகள் ஓடும். 62ஆகாரின் துன்ப நாட்களில் அவளுடைய குழந்தை மரிக்கும் வேளையிலே அங்கே உள்ளே இருந்ததான அந்த ஆகாரின் கன்மலை அதுவே அந்தக் கன்மலை அவரே, அவள் பாளயத்துக்குப் புறம்பே தள்ளப்பட்டாள். அவள் அங்கே வெளியிலே சின்ன இஸ்மவேலோடு இருந்தாள், அவள் தன்னோடு கொண்டுபோன அவளுடைய தொட்டியாகிய துருத்தியின் தண்ணீர் செலவழிந்து போயிற்று, அந்த நிலையில் அவள் குட்டி இஸ்மவேலை அங்கே கிடத்திவிட்டு ஒரு அம்பு பாயும் தூரத்திற்கு போய் கதறினாள். ஓ ஏனென்றால் அந்தக் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது, அவள் அதை காண விரும்பவில்லை. உடனே கர்த்தருடைய தூதன் பேசினான். அவள் அங்கே தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும் பெயர்செபாவை கண்டாள். இன்றைக்கும் அங்கே தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. அவரே அந்த வனாந்தரத்தில் உள்ள கன்மலை. ஆகாரின் பெயர்செபாவாய் இருந்தார். 63அது இங்கே இரத்தத்தினால் நிறைந்த ஊற்றாய் நின்று கொண்டு இருந்தது. அந்தநாளில் அங்கே தேவாலயத்திற்குள்ளாய் இருந்தது. புயலின் நேரத்தில் சகரியா - 13ம் அதிகாரத்தில் அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். அவரே அந்த ஊற்று. அவரே அந்த ஊற்றாய் இருக்கிறார். சங்கீதம் - 36-9ல் அவரே தாவீதின் ஜீவ ஊற்றாய் இருக்கிறார். தாவீதின் வீட்டிலே அவர் இன்னமும் அதே ஊற்றாய் இருக்கிறார். அங்கே புலவனின் இருதயத்திற்குள் அவரே புலவன் இவ்வண்ணம் கூறுகிறார். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே பாவிகள் அவ்வூற்றில் மூழ்கும் போது. அவர்கள் பாவ கறைகள் யாவும் இல்லாமல் போம். அவரே அந்த ஜீவ ஊற்று நீரூற்று தண்ணீராய் இருக்கிறார். அவரே தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார். 64இந்த கடைசி நாட்களில் ஜனங்கள் அவரை உண்மையான வார்த்தையை ஜீவ தண்ணீரை விட்டு விட்டு. மீண்டுமாக அவர்களுக்கு ஒரு ஸ்தாபன தொட்டிகளை வெட்டி கொண்டார்கள், “அவர்கள் அதை உடைத்து விட்டார்கள் வெடிப்புள்ள தொட்டிகளை வைத்திருந்தார்கள் என்று காண்பித்தோம்” அதோ அது அவிசுவாச கிருமிகள், அவிசுவாச பெருமை, கல்வித்திட் டங்கள் முதலானவைகளால் அதை நிரப்புகிறார்கள், இவை தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு முரணாக இருக்கின்றது. 65அவர்கள் வார்த்தையை சந்தேகிக்கிறவர்கள் அவர்களிடத்தில் இருக்கின்ற இந்த தொட்டிகள் வெடிப்புள்ளவைகள் என்று வேதம் கூறுகிறது. வெடிப் புள்ள தொட்டிகள் ஒழுகும் தொட்டிகள் அவைகளிலிருந்து கசிந்து வெளியேறும், அது என்ன செய்கிறது? அது கசிந்து சபைகளின் உலக ஆலோசனை சங்கம் என்று அழைக்கப் படும், ஒரு மத சம்பந்தமான சாக்கடை தொட்டிக்குள் போய் சேருகிறது. அந்த வெடிப்புள்ள தொட்டிகள் அவர்களை அங்கேதான் கொண்டுசெல்கிறது, எல்லா தொட்டிகளும் அங்கேதான் கொண்டு செல்கின்றன. ஏனென்றால் அவைகள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிட்டு, இப்படிப்பட்ட தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக் கொண்டனர். கற்றுக் கொடுத்தல் கல்வி முதலான பெரிய குருமார் பள்ளி முறைமைகளை வெட்டுகின்றனர். அந்த விதமான தொட்டிகளைத் தான் இன்றைக்கு அவர்கள் வெட்டி எடுக்கின்றனர். அதாவது பிரசங்கிபதற்கு போகும் முன்னதாக அவன் ஒரு Pht, LLd, அல்லது BA, அல்லது எதையாவது உடையவனாக இருக்க வேண்டும். மனிதனாலான மத சாஸ்திரங்களினால் நிறைந்த தொட்டிகள். பயிற்சி அளிக்கும் மகத்தான பள்ளிகளுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அங்கே அவர்களுடைய மனிதனால் ஆக்கப்பட்ட சமய சாஸ்திரத்தை அவனுக்குள் புகுத்தி பின்னர் அவர்களை அதோடுகூட அனுப்புகின்றனர். மனிதனால் ஆக்கப்பட்ட தொட்டிகளில் ஜீவிக்கும் எந்த ஒரு நாளில் நாம் இருக்கிறோம். அது நாற்றம் எடுக்கிறதினால் வியப் பொன்றுமில்லை. ஓ என்னே. 66அதன் காரணம் என்ன வென்றால் ஜனங்கள் அதிலிருந்து குடிக்கிறார்கள், ஜனங்களுக்கு சந்தோஷம் வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள். கர்த்தருடைய சந்தோசத்தை இன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக ஜனங்கள் சந்தோசத்திற்காக பாவத்துக்கு திரும்புகிறார்கள். சபைக்குச் சென்று கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்று உரிமை கோருபவர்கள். அவர்களுக்கு உண்மையாகவே சற்று கலவரம் அடையும்போது, ஒரு சிகரெட்டை பற்றவைத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சிறிது கேளிக்கையாக இருக்க விரும்பும்போது, ஒழுக்கங்கெட்ட ஆடைகளை அணிந்து கொண்டு, மனிதர்கள் கடந்து போகையிலே உள்ளே வெட்டிக்கொண்டு இவைகளைப் பார்த்து அவர்கள் விசிலடிக்கும் படியாய் செய்கிறார்கள். எல்லாரும் அறியப்பட்டவர்களாய் இருக்கும்படியாக அவர்கள் எல்லா காரியங்களையும் செய்கிறார்கள். சினிமா நட்சத்திரங்களைப் போன்று அவர்கள் காணப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதுதான் அவருடைய சந்தோஷம். இயேசுவானவரோ நானே அவர்களுடைய போதுமானவராய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவர்கள் அந்த விதமான காரியங்களுக்கு போவதற்கு காரணம், அந்த ஊற்றிலிருந்து அவர்கள் குடிக்க விரும்புகிறதில்லை. அவர்கள் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டார்கள். அதிலிருந்து அவர்கள் குடிக்க விரும்பவில்லை, ஒரு மனிதனால் ஆக்கப்பட்ட ஏதோ ஒரு அமைப்போடு, தேக்கப் பொருட்கள் நிறைந்திருக் கின்ற ஒருவிதமான தொட்டிகளோடு அவர்களை போன்று நாங்களும் போகத்தக்கதாக அதனோடு போய் சேர்ந்து கொள்கிறார்கள். 67நேற்றைய தினம், இல்லை, சனிக்கிழமை காலை என்று நினைக்கிறேன். நாங்கள் சிறுப்பிள்ளைகள் யாவரையும் ஆற்றண்டைக்கு கொண்டு சென்றோம். நாங்கள் அங்கு சென்றோம் பில்லி படகில் மீன் பிடித்து கொண்டிருந்தான். நாங்கள் என்னுடைய சிறிய மகன் என் மகனுடைய பேரப்பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஆற்றின் படகு சவாரிக்கு சென்றோம். உங்களால் படகில் கூட போக முடியாது ஏனென்றால், சுற்றிலும் அசுசியான அரை நிர்வாணமான மோசமானவர்கள் நிறைந்திருந் தார்கள். எங்கள் பக்கமாக ஒரு படகு வந்தது, அதில் ஒரு கூட்ட பனிரெண்டு பதிநான்கு வயது பையன்கள், அவரவர் கரத்தில் ஒரு பீர் பாட்டில்களையும், சிகரெட்டையும் வைத் திருந்தார்கள். அவர்கள் அதை ஜாலியாக இருக்குறோம் என்று கூறுகிறார்கள். 68ஓ என்னே இப்படிப்பட்டதான ஒரு ஒழுங்குமுறை களை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம்தான் இந்த உலகம் இருக்கப்போகின்றதோ. நாங்கள் மரிக்கும்போது நரகத்துக்கு போவோம் என்ற எண்ணத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும்படிக்கு, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்கள் போய் மனிதனால் ஆக்கப்பட்ட ஏதாவது தொட்டிகளோடு சேர்ந்து கொண் டார்கள். அதனால் அதே விதமான ஜனங்கள், அந்தத் தொட்டியில் சேர்ந்தவர்களால் இருக்கிறார்கள். ஒரு கூட்ட சுத்தமில்லாத கெட்டுப்போன உலகத்து தலைப்பிரட் டைகளை அல்லாமல் வேறொன்றுமில்லை. அவர்களோடு கூட அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள், ஏனென்றால் என்னுடைய வயதான தாயார் கூறுவது போன்று, ஒரேவிதமான செட்டைகளை உடைய பறவைகள் ஒன்று கூடி இருக்கும் என்பது போன்று. அவர்களுடைய பாவ ஜீவியத்தில் நின்று கழுவப்படும் படியாக அந்த ஊற்றண்டைக்கு வர அவர்களுக்கு விருப்பமில்லை. அங்கே ஜீவிக்கவே அவர்கள் விரும்பி தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று இன்னமும் ஒரு சாட்சியை வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என்ன காரணம், உண்மையான சந்தோஷ ஊற்றை ஜீவனை பரிபூர்ண ஜீவனை திருப்தியாகிய அவரை விட்டு விலகி விட்டார்கள். அவர்கள் வேறு ஏதோ ஒன்றுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர்கள் அதை செய்தார்கள். அந்த விதமான காரியத்தில் விசுவாசம் கொண்ட ஒருவிதமான ஜனங்கள் அவர்கள் இடத்தில் இருக்கிறார்கள். 69இங்கே சமீபத்தில் சகோதரன், பிரெடும். (Fred) நானும் சகோ, டாமும். (Tom) இன்னும் சிலருமாய் டூசான் பட்டணத்திலுள்ள ஒரு பிரபலமான பாப்டிஸ்ட் சபைக்கு சென்று, ஒரு சிறு புதிதான உணர்வை கொடுக்கக்கூடிய ஏதாவது ஒன்று அங்கே கிடைக்குமா என்று பார்க்க போயிருந்தோம். அங்கே அந்த போதகர் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்படும் முன்னர், பூண்டு முதலானவைகளை சாப்பிட்டுக் கொண்டிருந் ததாகவும், வனாந்தரத்தில் போனப்பிறகு மீண்டுமாய் அதை சாப்பிட விரும்பியதாகவும், அது ஏதோ இன்றைய ஜனங்களை போன்று இருப்பதாகவும் கூறினார். நாங்கள் யாவருமாய் ஆமென் என்று கூறினோம். அது போன்ற ஒரு கூட்ட ஜனத்தை நான் பார்த்ததே கிடையாது, அவ்வளவுதான் முழு சபையாரும் அவருடைய பார்வையை பேச்சாளரின் பக்கத்தில் இருந்து திரும்பி, ஆமென் என்று கூறினார் யார் என்று பார்க்கும் படியாய், அப்படியே எங்களை நோக்கி பார்த்தனர். மரண திகில் அடைந்தது போன்று காணப்பட்டார்கள் அது என்னவென்று அவர்கள் அறியாதவர்களாய் இருந்தார்கள். தேவனை ஆர்ப்பரியுங்கள், வீணை யோடும் சுரமண்டலத் தோடும் அவரைத் துதியுங்கள், சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதிப்பதாக, கர்த்தரை துதியுங்கள் என்று தாவீது கூறுகிறான். தேவன் தம்முடைய ஜனங்களில் களி கூறுகிறார், சரியான ஏதாவது காரியம் கூறப்படும் போது, கற்றறிந்தவர்கள் ஆமென் என்று கூறுங்கள். 70ஏன் இந்த ஒழுங்கு முறைகளையும் உலகத்து தொட்டிகளையும் விட்டு திரும்பி, தன்னில் தானே சுரக்கும் விசுவாசமுள்ள தேவனுடைய முறைமைகளாகிய, இயேசு கிறிஸ்துவினிடம் திரும்பக்கூடாது. நீங்கள் ஏன்? அவரிட மாய் திரும்பக்கூடாது. அங்கே தேவனே நமது மிகுதியான சந்தோஷத்தையும், நமது மிகுதியான துதியையும், நமது மிகுதியான திருப்தியையும் தருகிறவராய் இருப்பார். என்னுடைய நரம்புகளின் அமைதி தேவனிடத் திலிருந்து வருகிறது, நான் கலங்கி போய் இருக்கும்போது நான் என்னுடைய திருப்தியை கிறிஸ்துவில் காண்கிறேன். ஒரு சிகரெட்டில் அல்ல, உலகத்தின் காரியங்களில் அல்ல, ஏதோ கோட்பாடுகளை சேர்ந்து கொள்வதினாளும் அல்ல, நான் போவேனானால் உங்களை ஏற்றுக் கொள்ளும் படியாய் திரும்பி வருவேன் என்று அவர் கூறின வாக்குத்தத்தமான வார்த்தையை, அவரைக் கண்டடைவ தில் திருப்தியை காண்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை நான் அதில் காண்கிறேன், அவரே என் சந்தோஷம். 71இந்த காரியங்களினாலும் உலக சபையாரின் ஐக்கியத்தை ஏற்படுத்துவதினாலும் அவர்கள் ஜீவிக்க ஒரு மேலான இடத்தை உண்டாக்கப் போகிறோம், என்று அவர்கள் கூறுகிறார்கள். என்னுடைய உண்மையான கருத்தின்படி பாவம் செய்வதற்கு அவர்கள் ஒரு மேலான இடத்தை தான் அவர்கள் உண்டாக்கப் போகிறார்கள். எப்படியாய் இருந்தாலும் அதற்குள் ஜீவிக்க அல்ல, ஆனால் மரிக்கவே அந்த முழு காரியமும் பாவமாய் இருக்கின்றது. ஜீவிப்பதற்கு பதிலாக பாவம் செய்யவே அதன் இடத்தை உண்டாக்குகிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய ஜீவ வார்த் தைக்கும் புறம்பாக உள்ள எந்த காரியமும் வெடிப்புள்ள தொட்டியாய் இருக்கின்றது. அதற்கு ஈடாக இருக்க முயற்சிக்கின்றதான எந்த ஒரு காரியமும். உனக்கு சமாதானத்தை கொண்டுவர நீங்கள் செய்ய முயற்சிக்கும் எந்த ஒரு காரியமும். உனக்கு ஆறுதலை கொடுக்க நீங்கள் செய்ய முயற்சிக்கும் எந்த ஒரு காரியமும். நீங்கள் சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளும் எந்த ஒரு காரியமும். இதற்கு பதிலாக அதன் ஸ்தானத்தில் இருக்குமானால் அது அசுத்தத்தினால் நிறைந்த ஒரு வெடிப்புள்ள தொட்டியே ஆகும். அவரே உனக்கு பரிபூரண திருப்தி அளிக் கிறவராய் இருக்கிறார். 72எனக்கு நினைவு இருக்கின்றது சில கோடைகாலங்களுக்கு முன்னர் நான் பின் கதவின் வழியாக வெளியேறினேன், அங்கே ஒரு வாலிபமான ஒருவன் இருந்தான். அவன், “என்னிடம் சொன்னான் நீர் எப்பொழுதும் பெண்களைக் குறித்தும், அரைக்கால் சட்டை அணிவதை குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறதற்கு உமக்கு என்ன வென்று உமக்கே தெரியும். ஏனென்றால் நீர் ஒரு வயதான மனிதன் அதுதான் அதற்கு காரணம்” என்று அவன் சொன்னான். அதற்கு நான், “இங்கே பார் உனக்கு என்ன வயதாகிறது என்று” கேட்டேன். அவன், “இருபத்தேழு” என்றான். அதற்கு நான், “உன்னைவிட அனேக வருடங்கள் குறைவான வயதை உடையவனாக இருந்தபோது நான் இதே காரியத்தை பிரசங்கித்தேன்” என்று கூறினேன். நான் ஒரு திருப்தியின் ஊற்றை கண்டுபிடித்தேன், அவரே என்னுடைய பங்காய் இருக்கிறார். ஆமென். அவர் அதை எனக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் மட்டும் அதுவே எனக்கு அழகாய் இருக்கின்றது, அதுவே என்னுடைய கலையாய் இருக்கின்றது, அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பதும், அவருடைய கரம் கிரியை நடப்பிக்கிறதையும், அவர் என்ன செய்து கொண்டிருக் கிறார் என்பதையும் கவனித்துக் கொண்டே இருப்பதே ஆகும். வேறு எந்த ஊற்றையும் நான் அறியேன்! ஓ பாய்ந்து போவது விலையேறப் பெற்றது, அது என்னை பனியைப் போல வெண்மை ஆக்குகிறது வேறு நதியை அறியேன், இயேசுவின் இரத்தம் தானே, இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்று அங்கே உண்டு எப்பாவம் தீங்கும் அதனால் நிவர்த்தியாகும். 73அந்த ஊற்றைத் தவிர வேறு எந்த ஊற்றையும் நான் அறியேன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அசுத்தனாய் இருந்தபோது அது என்னை சுத்திகரித்தது, அது என்னை சுத்தமாகவே வைத்துக் கொள்கிறது ஏனென்றால் அதன் அண்டையில் நான் சரியாய் ஜீவித்தேன். என்னுடைய ஆத்துமாவை சந்தோசம் மிக்க புத்தம் புதிதான தண்ணீரை நான் பருகுவேன். நான் அவ்வளவாய் பலசியப்பட்டு என்னால் இன்னொரு சற்று தூரபோகவே முடியாத நிலையில் எங்கேயும் போக முடியாத நிலையில் இருக்கும்போது, நான் அந்நிலையில் முழங்கால் படியிட்டு என்னுடைய ஒரு வாக்குத்தத்தத்தின்மேல் கைகளை வைத்து தேவனாகிய கர்த்தாவே நீரே என்னுடைய பெலன், நீரே என்னுடைய திருப்தி நீரே என்னுடைய எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறீர் என்று கூறுவேன். உடனே எனக்குள்ளாக இருந்து, ஏதோ பொங்கி எழும்பும் உணர்வு தோன்றும் நான் அதிலிருந்து வெளியே வருவேன். 74நான் ஐம்பது வயதை கடந்துள்ளவனாய் இருக்கிறபடியினாலே உங்களுக்கு தெரியும், எப்படி இருக்கும் என்று சில காலை எழும்பும்போது என்னால் படுக்கையிலிருந்து, ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாதவனாய் இருப்பேன். என்னே. உங்களால் அதை செய்யவே முடியாது ஆனால் யாரோ கதவண்டை தட்டிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது பில்லி என்னிடத்தில் எங்கோ ஏதோ அவசர நிலை இருக்கின்றது, நான் எங்கேயோ போக வேண்டியதாயிருக்கிறது என்று கூறுவான். அப்பொழுது என்னால் எப்படி அதை செய்ய முடியும் என்று நினைப்பேன், ஒரு அடி கூட எடுத்து வைக்க முயற்சிப்பேன், என்னுடைய பெலத்தினால் நிறைக்கப் பட்ட ஊற்று நீரே ஆமென். என்னுடைய பெலனும் துணையும் கர்த்தரிடத்திலிருந்து வரும். நீரே என்னுடைய தன்னில் தானே சுரக்கும் ஊற்றாய் இருக்கிறீர், நீரே என் வாலிபமாய் இருக்கிறீர். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். (ஏசாயா-40-31) தேவனாகிய கர்த்தாவே போவது என்னுடைய கடமையாய் இருக்கின்றது, என்னுடைய கடமையின் ஸ்தானத்திற்கு நான் அழைக்கப்படுகிறேன். 75முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா? ஏதோ காரியம் எனக்குள்ளாக கடகடவென்று சத்தமிட துவங்குகிறது, அன்றொருநாள் அங்கே அவரிடத்திலே கன்சாஸில் உள்ள, டோபேகாவில் (Kansas - Topeka) ஒரு கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தேன். அங்கே ஒரு பையன் இருந்தான், அவன் ஒரு வாலிபப்பிரசங்கி, முதலில் என்னுடைய கூட்டங்களுக்கு பொறுப் பேற்பவனாக இருந்தான். இங்கே உட்கார்ந்திருக்கும் சகோதரன், ராய். அந்த இடம் உமக்கு நினைவு இருக்கும், அங்கே இருந்த அந்த மகத்தான இடத்தில் அந்த ஊழியக்காரன், கூறையோ அல்லது பக்கவாட்டு சுவரோ இடிந்து விழுந்து, அதற்கு அடியில் அவன் நசுங்கி சிக்கி கிடந்தான். அந்த வாலிபன் மரித்து போகும் நிலையில் இருந்தான். அவனுடைய ஈரல் வெடித்து விட்டது, அவனுடைய மண்ணீரல் அதன் இடத்தை விட்டு பிய்ந்து போயிற்று, டன்கள் எடை உள்ளவைகள் அவன் மேல் விழுந்தது. நான் காலை ஆகாரத்திற்காக உட்கார்ந்து என் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது நான் அவளிடம் சொன்னேன், “மனைவியே உனக்கு தெரியும் இயேசுவானவர் இப்போ இங்கே இருப் பாரானால் அவர் என்ன செய்வார் என்று உனக்கு தெரியுமா? என்னுடைய கூட்டங்களுக்கு அவன் பொறுப் பேற்றபோது, அவன் கிறிஸ்துவைத்தான் பொறுப் பேற்கிறான் என்ற அந்த வார்த்தையை நான் நம்புகிறேன். அது பிசாசினுடைய ஒரு தந்திரமாய் இருக்கின்றது” என்றேன். நான் சொன்னேன், “இயேசுவானவர் இங்கே இருப்பாரானால் அவர் போய் அவன்மேல் அவருடைய கரங்களை வைப்பார், அந்த வாலிபன் சுகமாவான் அவருடைய ஈரல் வெடித்துப் போனதை குறித்து எனக்கு அக்கறையில்லை. அவன் சுகமடைவான் ஏனென்றால், சரியாக அவர் யார் என்று அறிந்தவராய்தான் இயேசு அங்கே நடந்து போவார். அவருடைய அழைப்பையும் வேத வார்த்தைகள் சரியாயும், அவர்தாம் யாரென்ப தையும் அறிந்திருக்கிறார் என்று ரூபகார படுத்துகிறதாயும் இருக்கின்றது என்பதை அவர் அறிந்திருந்தார். எந்தவித சந்தேகமுமின்றி, அவர் அவருடைய கரங்களை அவன் மேல் வைத்து மகனே சுகமாகு என்று சொல்ல, அவன் நடந்து வெளியே போவான்” என்றேன், “அப்பொழுது அந்த வாலிபனை கொன்று போட அங்கே பாதாளத்திலே போதுமான சாத்தான்கள் கிடையாது. அவன் சுகமடைவான்” என்றேன். ஆனால் நான் சொன்னேன், “நீ பார் தேனே அவர் இயேசுவாய் இருக்கிறார், தேவனுடைய பரிசுத்த கரங்களாய் இருக்கிறார். நானோ ஒரு பாவியாய்” இருக்கிறேன். நான் மாம்சீக உடலுறவினால் பிறந்தவன். என் தகப்பனும் என் தாயும் இருவரும் பாவிகள் நானோ ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன். ஆனால், “என்னவென்று உனக்கு தெரியுமா? எனக்கு மட்டும் கர்த்தர் ஒரு சரியானதை தந்து என்னை அங்கே அனுப்புவாரானால், அப்பொழுது அது வித்தியாசமான தாய் இருக்கும். நான் நேராக அங்கே போய் என் கரங்களை அவன் மேல் வைப்பேன், அவர் எனக்கு தரிசனத்தை கொடுப்பாரானால், அவன் சுகமடைந்து அந்த படுக்கையை விட்டு வெளியே வருவான்” என்றேன். 76பின்னர் நான் பார்த்தேன், பார்க்கப்போனால் அது தரிசனமாய் இருக்குமானால் அதனால் என்ன. அதே அசுத்தமான கரங்கள் தான் அவன் மேல் வைக்கப்பட்டு அதே மனிதன் தானே அவன் கரத்தை வைத்து ஜெபிக்க போகிறான் என்று நினைத்தேன். பின்னர் நான் சிந்திக்கலானேன்; நான் அவருடைய பிரதிநிதி, மட்டுமின்றி தேவன் என்னை காண போகிறது இல்லை, நீதியான ஒருவருடைய அந்த இரத்தம் அங்கே பலிபீடத்தின்மேல் இருக்கின்றது, அது எனக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறது. அவர் என்னுடைய போதுமான வராய் இருக்கிறார். அவர் என்னுடைய ஜெபமாய் இருக்கிறார். அவர் உன்னுடைய ஜீவனாய் இருக்கிறார் என்று சிந்திக்கலானேன். நான் சொன்னேன், விசுவாசத் தோடு என் கரங்களை, அவன் மேல் வைக்கும் படி செய்கிற ஒரே காரியம் என்னவென்றால் அந்த தரிசனத்தின் மேல் எனக்கு விசுவாசம் இருக்கின்றது தான் அதற்கு காரணம். தரிசனம் இல்லாமல் அதே விசுவாசம் அதே காரியத்தை நடப்பிக்கும். எனவே நான் என்மேல் நம்பிக்கை வைப்பதில்லை, ஆனால் என்னுடைய எல்லா வற்றிற்கும் எல்லாமுமாய், நான் அவரை நம்புகிறேன். அவர் என்னுடைய ஜீவன், அவரே என்னுடைய ஆணையர். எந்த ஒரு ஸ்தாபனமும் என்னை அனுப் பவில்லை, அவரே என்னை அனுப்பினார். அல்லேலூயா நான் அவருடைய நாமத்தில் போகிறேன். நான் அவன் மேல் என் கரங்களை வைக்கிறேன் என்றேன். நடந்து அங்கே போய் அந்த வாலிப பிரசங்கியாரின் மேல் என் கரங்களை வைத்தேன், அந்த இரவு அவன் சுகமடைந் தவனாய் கூட்டத்திற்கு வந்தான். ஆமென். 77ஓ ஆம், அவரே அந்த ஊற்று. வேறொரு ஊற்றை நான் அறியேன், இயேசுவின் இரத்தம் தானே. நான் அசுத்தமாணவன் நான் விட்டு ஓடுபவன் நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான், ஆனால் தேவனுக்கு முன்பாக நாம் பூரணசற்குணராய் இருக்கிறோம். ஆகை யால் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதா பூரண சற்குனராய் இருக்கின்றது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள். எப்படி உங்களால் அப்படி இருக்க முடியும் ஏனென்றால் ஒரு பரிபூரணர் நமக்கு பிரதிநிதித்துவமாய் அங்கே இருக்கிறார். அந்த ஊற்றானது அங்கே புத்தம் புதிதாய் எல்லா நாட்களிலும் இருக் கின்றது. தேங்கி நிற்கின்ற ஏதோ ஒரு காரியம் அல்ல ஆனால் தினமும் புத்தம் புதிதாய், என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவி நீக்குகின்றதாய் இருக்கின்றது. அவரே அந்த ஊற்று. 78இப்பொழுது முடிக்கின்ற நேரத்தில் இதைக் கூற நான் விரும்புகிறேன். இதை காட்டிலும் வித்தியாசமாய் இருக்கும் எந்தவொரு காரியமும் வெடிப்புள்ள தொட் டிகலாய் இருக்கின்றது முடிவிலே நீங்கள் அதில் ஊற்றி வைத்திருந்த யாவும் ஒழுகி போய்விடும். நீங்கள் உங்களுடைய எல்லா நம்பிக்கையையும், உங்களுடைய எல்லா நேரத்தையும், எல்லா காரியங்களையும் இந்த தேங்கி நிற்கும் தொட்டிகள் ஒன்றின்மேல் வைப் பீர்களானால், ஒழுகி போகும். இவைகள் வெடிப்புள்ள தொட்டிகள் என்று இயேசு கூறியுள்ளார். அவைகள் வெடிப்புள்ள தொட்டிகள், நீ அதில் ஊற்றிவைக்கும் யாவும் ஒழுகி போகும் என்று தேவன் கூறுகிறார். அதை நம்பி நீ தூரப் போக முடியாது ஏனென்றால் அவையாவும் ஒழுகி போகும். ஏனென்றால் அவரே சத்தியத்திற்கும் ஜீவனுக்கும் நித்திய சந்தோஷத்திற்கும் நித்திய சமாதானத்துக்கும் வழியாய் இருக்கிறார். அவரே அந்த ஒருவரே அதற்கான ஒரே வழியுமாய் இருக்கிறார். ஓ என்னே இயேசு கிறிஸ்து வற்றாத ஜீவ ஊற்றாய் இருக்கிறார். ஏன்? அவர் யாராய் இருக்கிறார்? வார்த்தையாய் இருக்கிறார். அதே வார்த்தையாய் இருக்கிறார். வார்த்தை, ஜீவன், ஊற்று, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். உண்மையான விசுவாசிக்கு அதுவே அவருடைய எல்லாவற்றிற்கும் மேலான சந்தோஷமாய் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலான ஜீவனாய் இருக்கும். அவனுடைய எல்லா வற்றுக்கும் மேலான சந்தோஷம், கிறிஸ்துவுக்குள் இருக்கும். அதை அழுத்தி வெளியே கொண்டுவரவோ இழுத்து வெளியே கொண்டுவரவோ சேர்ந்து கொள்வத னாலோ தூக்கிவிட வேண்டியதோ இல்லை, வெறுமன விசுவாசித்து கொண்டு இளைப்பாறிக் கொண்டு இருக்க வேண்டும். விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் அவ்விதமாய் தான் இருக்கிறார். 79தகப்பனாகிய ஆபிரகாமை போன்று அவன் ஒன்றும் இழுக்கமும் இல்லை, அவன் கோபம் கொள்ளவே இல்லை, அவன் கவலைப்பட்டதே இல்லை, அவன் வார்த்தையை உடையவனாய் இருந்தான். அவன் எல்ஷடாயின் மார்பின் மேல் சாய்ந்திருந்தான். ஆபிரகாம் நூறு வயது உள்ளவனாய் இருந்தபோது, தேவன் அவனுக்கு தரிசனமாகி நான் சர்வவல்லமையுள்ள தேவன், “எல்ஷடாய்” என்ற எபிரேய பதத்திற்கு உன்னை பாலூட்டி வளர்ப்பவன் என்று அர்த்தமாம். நீ வயது சென்றவனாகி விட்டாய் உன்னுடைய பெலன் போய்விட்டது. ஆனால் என் மார்பில் சாய்ந்து என்னுடைய ஊற்றிலிருந்து, உன்னுடையதை புசி என்றார். ஆமென். அவன் தனக்காக என்னத்தை புசித்தான், ஒரு புதிய சரிரத்தை; சாராளின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றான், 50 வருடங்களுக்கு பின்னர் இன்னொரு ஸ்திரீயின் மூலமாக ஏழு பிள்ளைகளைப் பெற்றான். ஓ, “எல்ஷடாய்” அவர் என்ன செய்தார் என்று பழைய ஏற்பாடு காட்டுகிறது, புதிய ஏற்பாடோ அவர் என்ன செய்வார் என்பதை கூறுகிறது. ஆமென். பழைய ஏற்பாட்டில். 80இப்பொழுது காற்று நின்று விட்டபடியினாலே நான் துரிதமாய் பேசி ஒரு நிமிஷத்தில் இதோடு முடிக்கிறேன். முடிப்பதற்கு முன்பாக நான் இதை கூற விரும்புகிறேன். இதை பற்றின ஒரு உதாரணம் ஒரு சமயம் எனக்கிருந்தது, அப்பொழுது நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன். இங்கே ஜார்ஜ் டவுனை சுற்றி உள்ளவர் களுக்கும், அங்கே பில் டவுனில் இருப்பவர்களுக்கும், அங்கே அந்த குன்றுக்கு அப்பால் ஒரு ஊற்று இருந்தது என்று அனேக ஜனங்கள் அறிந்திருந்தார்கள். அது தன்னில் தானே சுரக்கும் ஊற்று, நாங்கள் அங்கே ஐந்தடி ஆழமுள்ள ஒரு ஓடை தண்ணீரை தொடர்ந்து, அங்கிருந்து பொங்கி வெளி வந்தது அங்கே ஒரு பெரிய ஊற்று இருந்தது. அதை சுற்றிலுமாய் இங்கே பென்னிராயில் (Pennyroyal புதினா குடும்பத்தின் இரண்டு சிறிய-இலைகள் கொண்ட தாவரங்களில் ஒன்று, மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.) அதிகமாய் இருக் கின்றது உங்களுக்குத் தெரியும் பெண் போன்ற ஏதோ அங்கே வளர்கிறது அந்த ஊற்றண்டை போய் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற தாகம் எனக்கு உண்டாகும். நான் இந்த காரியத்தின் பக்கமாக படுத்துக்கொண்டு குடித்துக் கொண்டே இருப்பேன், எழுந்து உட்காருவேன் பின்னர் குடிப்பேன் காத்திருப்பேன். வருஷா வருஷம் நான் இன்னமும் அந்த ஊற்றண்டைக்கு போவேன். கோடை காலமோ குளிர்காலமோ அது நின்று போகிறது இல்லை. அவைகளால் அதை உலர்ந்து போகும் படியாயும், உலர்ந்துபோகும் படியாயும், செய்ய முடியவில்லை. தன்னில் தானே சுரக்கும் ஒரு ஊற்றை உங்களால் உறைந்து போகச் செய்ய முடியாது, ஓ முடியாது, முடியாது. எவ்வளவு குளிராக இருந்தாலும் சரி அதனால் அதை உறைந்து போகச் செய்ய முடியாது. ஒரு வெட்டப்பட்ட தொட்டியை உங்களால் உறைந்து போக செய்ய முடியும் சிறிது பனி பெய்தால் அது செய்துவிடும். புரிகின்றதா. ஆனால் அசைந்து போய்க்கொண்டிருக்கும் எந்த காரியமும் தன்னில் ஜீவனை கொண்டதாய் இருக்கும், அது சுற்றி போய்க்கொண்டே இருக்கின்றது. தன்னில் தானே சுரக்கும் ஊற்றுக்கிணற்றை உன்னால் உறைந்து போக செய்ய முடியாது. அதை சுற்றிலும் உள்ள இடங்களில் எவ்வளவுதான் ஆவி தொய்ந்து போய் இருந்தாலும் சரி அந்தக் கிணறு ஜீவனோடு இருக்கும். அந்த கிணற்றன்டை ஜீவி. 81அங்கே நான் கவனித்திருக்கிறேன் அதன் அருகில் சென்று அதை நான் குடித்து இருக்கிறேன். ஓ என்ன புத்தம் புதிதான தண்ணீர். நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை, நான் அங்கே போக முடிந்து அதை நான் குடித்தால் அதன் ஓட்டம் நின்று விடக் கூடுமா என்று ஐயுறுகிறேன். அதைத்தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு வயதான குடியானவர் என்னிடம், “என்னுடைய பாட்டனார் இதிலிருந்து குடித்தார் என்றான். அது, இல்லாமல் போகவும் இல்லை குறையவும் இல்லை இன்றைக்கு அது அதே விதமாக இருக்கின்றது, தண்ணீர் பீய்ச்சு கொண்டு நீல நதிக்கு போகிறது” என்றான். நான் நினைத்தேன் ஓ என்ன தண்ணீர் பருக என்ன ஒரு அருமையான இடம் என்று, பாதையை விட்டு சுமார் ஒரு மைல் தூரம் நடந்து போய் அந்த இடத்தை சேருவேன். ஏனென்றால் தண்ணீர் குடிப்பதற்கு அது அவ்வளவு ஒரு அருமையான இடம். ஓ அந்த தண்ணீர் எவ்வளவு நன்றாக இருக்கும் ஓ என்னே. நான் அங்கே அரிசோனாவில் வனாந்தரத்திற்கு நான் போகும்போது, இன்னும் நான் அதை குறித்து அங்கே நினைப்பதுண்டு. அங்கே இருக்கின்ற அந்த அற்புதமான ஊற்று அதனண்டை அப்படியே படுத்துக் கிடந்தால் எப்படியாயிருக்கும். ஒரு சமயம் தாவீது கூறினது போன்று, ஓ என்னால் மட்டும் இன்னும் ஒரு முறை அந்த தண்ணீரை குடிக்க முடிந்தால் என்று. என்னால் மட்டும் அங்கே போக முடிந்தால். 82ஒரு நாள் நான் உட்கார்ந்தேன் எனக்கு ஒரு வினோதமான காரியம் சம்பவித்தது, “எப்பொழுதுமே உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறது என்ன? அதைப்போலவே நானும் சந்தோசமாய் இருக்க வாஞ்சிக்கிறேன், ஏனென்றால் நான் இங்கே வந்த நாள் முதல் உன்னை வருத்தமாகவே பார்த்ததில்லை, உன்னைக் குறித்து ஒரு வருத்தமான காரியமும் இல்லை என்று” சொன்னேன். நீ எப்பொழுதும் சந்தோஷத்தால் நிரம்பி இருக்கிறாய், நீ குதித்துக் கொண்டும் பொங்கிக் கொண்டு இப்படியாய் இருந்து கொண்டும் இருக்கின்றாய், குளிர்காலம் அல்லது கோடைகாலம் குளிரோ அல்லது உஷ்ணமோ அது என்னவாய் இருந்தாலும் சரி, நீ எப்பொழுதும் சந்தோஷத்தால் நிறைந்து இருக்கின்றாய். உன்னை அவ்விதமாய் வைத்துக் கொண்டு இருப்பது என்ன? அது என்ன? நான் உன்னிடத்திலிருந்து தண்ணீரை குடிக்கிறேனே அதனாலயா? “தெரியாது” சரி ஒருவேளை முயல்கள் உன் தண்ணீரை குடிப் பதினாலா? நீ அதை விரும்புகிறதினால் இருக்கலாம் என்று சொன்னேன். “தெரியாது” சரி இந்த விதமாக உன்னை பொங்க வைக்கிறது தான் என்ன? உன்னை இவ்வளவு சந்தோஷமாய் வைக்கிறது என்ன? உன்னை இவ்வளவு ஆனந்தத்தால் நிரப்பி இருக்க செய்வதுதான் என்ன? பறவைகள் உன்னிடத்தில் தண்ணீரை குடிப்பதனால் இருக்குமா? என்று கூறினேன். “தெரியாது” நான் உன்னிடத்தில் தண்ணீரை குடிப்பதினாலயா? என்றேன். “தெரியாது” உன்னை இவ்வளவு ஆனந்தமாக வைத்துக் கொள்வதுதான் என்ன? அந்த ஊற்றினால் மட்டும் பதில் பேச கூடுமானால் அது இந்த வண்ணமாய் பதில் கூறியிருக்கும். சகோதரன் பிரன்ஹாம், “நீர் குடிப்பதின் காரணத்தினால் அல்ல, நான் அதை பாராட்டுகிறேன், பறவைகளுக்கு என்னால் தண்ணீர் கொடுக்க முடிகின்றதால் அல்ல, குடிக்க விரும்புகின்ற யாவருக்கும் நான் தண்ணீர் கொடுக்கிறவனாய் இருக் கிறேன். நீர் செய்ய வேண்டியதெல்லாம் இங்கே வந்து பருக வேண்டியது தான். ஆனால் என்னை சந்தோஷப் படுத்துகிறதெல்லாம், அது நான் பொங்கிக் கொண்டிருப் பதல்ல, ஏதோ காரியம் எனக்குள்ளாக இருந்து கொண்டு என்னை மேல் எழும்ப செய்கிறது, ஏதோ காரியம் எனக்கு உள்ளாக இருந்துகொண்டு என்னை பொங்கச் செய்கிறது”. ஒரு ஆவியினால் நிறைந்த ஜீவியத்தோடும், அது அந்தவிதமாகதான் இருக்கும். இயேசுவானவர் கூறியது போன்று, அவர் உள்ளே இருந்தால் அவர் உனக்கு ஊற்றுகளின் தண்ணீரை நித்திய ஜீவனுக்கு போகுமட்டாய் பொங்கி எழ செய்தார், தன்னில் தானே சுரக்கும் தொடர்ந்து பொங்கி வழிந்தோடும் படியாய் செய்கிறார். மற்ற சபைகள் மேலெழும்பி இருந்தாலோ, அல்லது கீழாக தொய்ந்து போய் இருந்தாலும் சரி, நீ இன்னும் அந்த ஊற்றண்டையிலே இருக்கிறாய். தன்னில் தானே சுரக்கின்ற கிணற்றன்டைக்கு, ஊற்றண்டைக்கு, வந்து பருகும்படி நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது. ஏன்? கிருமிகள் மற்றவைகளால் நிறைந்துள்ள ஒரு பழைய ஸ்தாபன ஒழுங்கையோ அல்லது தொட் டியையோ தேர்ந்தெடுத்து அதிலிருந்து தேங்கின தண்ணீ ரை குடிக்க வேண்டும். 83அது எப்படியாய் தள்ளிக் கொண்டும், பொங்கிக் கொண்டும், மேலெழும்பிக்கொண்டும், சந்தோஷித்துக் கொண்டும், கொப்பளித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஆடிக்கொண்டும் என்று நான் நினைக்கிறேன். குளிராயும் மழையாயும் சூடாயும் வறட்சியாயும் இருந்தாலும், தேசத்தின் மற்ற பகுதி எல்லாம் வரண்டு காய்ந்து கொண்டிருந்தாலும், அது எப்பொழுதும் போலவே பொங்கிக் கொண்டிருக்கும். ஏனென்றால் வெகு ஆழத்தில் வேரூன்றப்பட்டதாய் இருக்கின்றது, எங்கே பாறைகளுக்கு அடியில் இருந்து பொங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. ஓ அந்தப் பீய்ச்சிடும் தண்ணீர் அண்டையில் நான் ஜீவிப்பேனாக, வேண்டுமானால் உங்களுடைய மனித னாலான ஒழுங்குகள், உங்களுடைய எல்லா தேங்கின கிணறுகளையும் எடுத்துப் போடுங்கள். ஆனால் என்னை மட்டும் அந்த ஊற்றண்டை வரும்படியாய் விட்டு விடுங்கள். நான் அங்கே வரும்படியாய் என்னை விட்டு விடுங்கள், அவர் நிறைந்திருக்கிறார். அவரே என்னுடைய சந்தோஷம், அவரே என்னுடைய வெளிச்சம், அவரே என்னுடைய பெலன், அவரே என்னுடைய தண்ணீர், அவரே என்னுடைய ஜீவனாய் இருக்கிறார். அவரே என்னுடைய சுகமளிப்பவர், அவரே என்னுடைய இரட்சகர், அவரே என்னுடைய ராஜாவுமாய் இருக் கிறார். எனக்கு தேவையான எல்லா காரியங்களையும் நான் அவருக்குள் கண்டடைகிறேன். நான் வேற எதற்காகவோ ஏன்? போக வேண்டும். 84சகோதரனே, சகோதரியே, இன்று இரவு நீங்கள் இந்த ஊற்றண்டை வர மாட்டீர்களா? வர மாட்டீர்களா? நீங்கள் இங்கே வந்ததே இல்லை என்றால், நாங்கள் தலைவணங்கி இருக்கிற இந்த வேளையிலே, இன்று இரவு இந்த வேளையிலே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? வெடிப்புள்ள தொட்டிகள் கசிந்து கொண்டும், ஒழுகிக் கொண்டும் இருக்கின்றன, உலகம் அதற்குள்ளாக கசிந்து கொண்டு இருக்கின்றது, களத்திலுருந்தும் மற்ற நாட்களில் இருந்துமுமான அசுத்தம் அதற்குள்ளாக கசிந்து கொண்டிருக்கிறது. அந்த காரியம் அதற்குள் தரித்து இருக்க முடியாது, இது இம்மானுவேல் இரத்தத்தால் நிறைந்த ஊற்றாய் இருக்கின்றது. ஏன்? இந்த ஊற்றில் ஏன்? வேண்டாம். நீங்கள் அதை இன்று இரவு ஏற்றுக் கொள்ளக் கூடாதா இந்த வறண்ட தாகிக்கின்ற தேசத்தில் இன்று இரவு தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக. தீர்க்கதரிசி சொன்னது போன்று விடாய்த்து போன தேசத்திலே அவரே என்னுடைய கன்மலையாய் இருக்கிறார். அவரே அந்த ஊற்றாய் இருக்கின்றார். நாங்கள் ஜெபிக்கின்ற இந்த வேளையிலே, உங்களுடைய இருதயத்தில் இன்று இரவு நீங்கள் அவரண்டை வர மாட்டீர்களா? 85அன்புள்ள பரலோக பிதாவே. இசை வாசித்துக் கொண்டிருக்கையிலே வேறொரு ஊற்று இல்லையே, இயேசுவின் இரத்தத்தை அல்லாமல் வேறொரு நதியை நான் அறியேன். நான் அங்கே தான் பிறந்தேன், நான் அங்கே தான் வளர்க்கப்பட்டேன், நான் அங்கே ஜீவிக்க அங்கே மரிக்க மீண்டும் அங்கேயே உயிர்பிக்கப்பட அவருடைய சமூகத்தில் இருக்க விரும்புகிறேன். எப்பொழுதும் கர்த்தாவே, அவருடைய பிரசன்னத்தில் இருப்பேனாக, ஏனென்றால் வேறே ஒரு நதியை அறியேன். கோட்பாடுகள் கிடையாது, அன்பு இல்லை, அன்பு இல்லை, கிறிஸ்து மட்டும். கோட்பாடுகள் இல்லை, ஆனால் கிறிஸ்து மட்டும். எந்தப் புத்தகமும் இல்லை, வேதாகமம் மட்டுமே. வேறொன்றுமில்லை அவருக்குப் புறம்பாக அன்பும் இல்லை, உலகத்தில் எத்தனை பங்கு எனக்கு இருந்தாலுமோ தேவனே, அவரை என்னிடத்தில் இருந்து எடுத்து விடுவீரானால் நான் இன்னமும் மரித்தவனாகவே இருப்பேன். என்னுடைய கரங்களை என் தலைக்கு மேலாக தூக்கிக்கொண்டு அலைகிறவனாய் இருப்பேன். அவரை என்னிலிருந்து எடுத்து விட்டால் கர்த்தாவே நான் தொலைந்தேன், அவர் எனக்குள்ளாகவே இருக்கட்டும், அப்பொழுது டிசம்பர் எனக்கு மேமாதம் போன்று அவ்வளவு அருமையாக இருக்கும். அப்பொழுது உஷ்னமான இடங்களே கிடையாது, வறட்சியான இடங்களே கிடையாது, மரணத்திற்கும் கூட ஜெயம் கிடையாது. அவர் எங்களோடு இருக்கட்டும் பிதாவே, இந்த விசுவாசிகள் காத்திருக்கின்ற இந்த அறையிலே இன்று இரவு ஒவ்வொருவருக்கும் அபரிதமாய் கொடும் தேவனே. அநேகர் இன்று இரவு கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போகும் போதும், நெடுந்தூரம் வண்டி ஓட்டிக்கொண்டு போக வேண்டியவர்களாய் இருக்கும். போகையிலே நான் அந்த ஊற்றண்டையிலே ஜீவித்துக் கொண்டு இருக் கிறேன். நான் அங்கே தான் ஜீவிக்கிறேன், ஒவ்வொரு மணி நேரமும் புத்தம் புதிதாய் குடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்ற இந்த காரியம் அவர்கள் நினைவாய் இருக்கட்டும். அவர்கள் இன்னமும் அதைப் பெற்றுக் கொள்ளாதிருப்பார்களானால், அவர்கள் இப்பொழுது அவரை பெற்றுக் கொள்வார்களாக, அதனால் அவர்கள் அந்த ஊற்றை அவர்களோடு கூடவே கொண்டு போகலாம். நான் உங்களோடு இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு இருப்பேன், இந்தக் காரியங்களை அளியும் பிதாவே. 86இப்பொழுது நாம் நமது தலைகளை வணங் கியவாறு இருக்கையிலே கர்த்தாவே இப்பொழுதே என்னை அந்த ஊற்றண்டைக்கு கொண்டு போம், இங்கே வெறுமனே செவியால் கேட்பதற்காக நான் வரவில்லை. எதையோ கண்டறியும் படியாக இங்கே வந்தேன், கர்த்தாவே உம்மை கண்டுபிடிக்கவே நான் இங்கு வந்தேன், இன்று இரவு நீரே என்னுடைய தேவையாயிருக் கிறது என்னுடைய இருதயத்துகுள் இப்பொழுது வாரும், அதை நீர் செய்வீரா கர்த்தாவே என்று இன்று இரவு சொல்லக்கூடியவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அல்லது எத்தனை பேர்கள் அப்படியாய் சொல்லப் போகிறீர்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்கள் ஒவ்வொரு வரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 87பிதாவே உயரேயும் மதிலை சுற்றியும் உள்ளே இருக்கும் அறைகளிலும் வெளியையும் கரங்கள் உயர்த் தப்பட்டிருக்கிறதை நீர் காண்கிறீர். பிதாவே நீர் அதை கண்டீர், அவர்களுடைய தேவையான எல்லா காரியங் களையும், நீர் அவர்களுக்கு தரும் படியாக நான் ஜெபிக்கிறேன். ஒருவேளை கர்த்தாவே அவர் அந்தப் பழைய தொட்டியிலிருந்து குடித்துக் கொண்டிருக்கலாம். அது எங்கே பாதிவழியில் தங்கின போது, ஒரு மனிதனால் வெட்டப்பட்ட தொட்டியிலிருந்து குடித் தார்கள். எல்லா வித வினோதமான உபதேசங்களால் நிறைந்து அசுத்தமாகி வார்த்தையை மறுக்கிறது. அந்த நீருற்றாகிய அவரிடம் அந்த ஜீவ ஊற்றிடம் இன்று இரவு அவர்கள் வர வேண்டுமென்று தேவனே நான் ஜெபிக்கிறேன். இதை அளியும் பிதாவே. அவர்களை உம்மிடத்தில் இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். நீர் சொல்லி இருக்கிறீர் என் நாமத்தில் நீங்கள் எதை கேட்டாலும், அது அப்படியே நடக்கும் என்று, இப்பொழுது கர்த்தாவே இது சம்பவிக்காது என்று நான் நினைக்கின்ற காரியத்தை நான் உம்மிடத்தில் கேட்கப் போவதில்லை, அப்படியானால் நான் இதை வழக்கமான சடங்காச்சாரத்தில் கூறிக்கொண்டு இருக் கிறவனாக இருப்பேன். ஆனால் கர்த்தாவே நான் உத்தமத்தோடு அவர்களுக்காக ஜெபிக்கிறேன். நீர் வாக்களித்துள்ளதை நீர் அளிப்பீர் என்று நம்பிக் கொண்டு அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இன்று இரவு நான் அவர்களை அந்த தொட்டியில் இருந்து விலக்கிக்கொண்டு போகிறேன். அவர்கள் குடித்துக்கொண்டு இருக்கின்ற இடத்திலிருந்து, நான் அவர்களை விலக்கி இந்த ஊற்றண்டைக்கு கொண்டு போகிறேன், அங்கே அவர்கள் திருப்தியாய் இல்லை. நான் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறேன். 88அவர்கள் உம்முடையவர்கள் கர்த்தாவே, அவர்கள் உம்மிடத்திலிருந்து ஜீவ தண்ணீரை, ஜீவத் தண்ணீர் ஊற்றை, அவர்கள் பருகும் படி செய்யும். இயேசுவின் நாமத்தில் நான் இதை கேட்கிறேன் ஆமென். அதை அளியும் கர்த்தாவே. ஓ, இயேசுவே இவர்களை சுகப்படுத்தும் கர்த்தாவே. இதை அளியும் கர்த்தாவே, இயேசுவின் நாமத்தின் மூலமாய் கேட்கிறேன். நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே நீர் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறீர். அதை சற்று யோசித்துப் பாருங்கள், வேறொரு ஊற்று இல்லையே, அவரைத் தவிர வேறொன்றையும் நான் அறியேனே நான் அவரைத் தவிர வேறொன்றையும் அறிய வாஞ்சிக்கவும் இல்லை, இயேசுவின் இரத்தத்தை தவிர வேறொன்றும் இல்லை. 89நாம் அதை மீண்டுமாய் பாடுகையில் நாம் ஒருவருக்கொருவர் கரங்களை குலுக்குவோம். நீங்கள் ஒருவரில் ஒருவர் நேசிக்கிறீர்களா? இங்கிருக்கின்ற யாருக்காவது மற்றொருவருக்கு எதிராக ஏதாவது காரியம் இருக்கின்றதா? அப்படி இருக்குமாயின் போய் அதை சரி செய்து கொள்ளுங்கள். செய்வீர்களா? அந்த விதமாக நாம் இங்கே இருந்து, போக வேண்டாம். புரிகின்றதா? சரி செய்து ஆக வேண்டும் என்று ஏதாவது யாருக்காவது எதிராக இருக்குமானால் நீங்கள் போய் அதை இப் பொழுதே சரி செய்யுங்கள். நீங்கள் போய் சகோதரனே, சகோதரியே, உங்களைக் குறித்து நான் ஏதோ காரியம் தவறாய் நினைத்தேன் அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை, என்னை மன்னியுங்கள் என்று சொல்வதற்கு இதுவே உங்களுடைய சரியான தருணமாய் இருக்கின்றது. பாருங்கள். அதை செய்ய வேண்டிய வழியே அதுதான். அந்த நீரூற்றை நாம் எப்பொழுதும் எல்லா நேரத்திலும் உடையவர்களாய் இருப்போமாக புரிகின்றதா. அவர் அற்புதமானவர் அல்லவா; வேற ஊற்று கிடையாது, மற்ற காரியங்களினால் நாங்கள் எங்களை அசுசி படுத்தி கொள்ள மாட்டோம். நாங்கள் வேறு பிரிந்து விட்டோம். உலகத்தை பின்னே விட்டு விட்டோம், எகிப்தின் வெள்ளைப் பூண்டுகளும் பிடிப்புள்ள தொட் டிகளும், இனி எங்களுக்கு வேண்டியதில்லை. அடிக்கப் பட்ட கன்மலையாகிய கர்த்தராகிய இயேசுவோடு கூட நாங்கள் பிரயாணத்தில் இருக்கிறோம். ஆமென். பரலோ கத்திலிருந்து வந்த மன்னாவை புசித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும், தூதர்களின் ஆகாரத்தை புசித்துக் கொண்டும், கன்மலையின் தண்ணீரை குடித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆமென். இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 90தேவன் தாமே உங்களை கொழுமையாய் ஆசீர்வதித்து அவருடைய கிருபையையும் இரக்கமும், வருகின்ற வாரத்தில் உங்களோடு கூட இருக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். அப்படி ஏதாவது சம்பவித்து உங்களில் யாராவது திரைக்குப்பின்னால் நழுவிப் போக வேண்டியதாய் இருந்தால், அது நாம் ஒன்று சேர்வதற்கு முன்னால் உண்டான ஒரு சில மணி நேர நித்திரை அல்லது இளைப்பாறுதலாய் இருக்கும். நினைவிருக் கட்டும் அதாவது கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடு இருக்கும் நாம், நித்திரையடைந் தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை, ஏனென்றால் தேவ எக்காளம் கடைசி எக்காளம், ஆறாம் எக்காளம், இப்பொழுதுதான் முழங்குகிறது, கடைசி முத்திரை போன்று, அந்த கடைசி எக்காளம் கர்த்தருடைய வருகையாயிருக்கும். அது முழங்கும் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழும்பு வார்கள், அந்த நேரம் மட்டுமாய் இளைப்பாறிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் புண்பட வேண்டியதானால்... நினைவிருக்கட்டும் எல்லா கன்னிக்கும் ஒரு கேடயமாக இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டுபோம். உன்னை சோதனைகள் சுற்றி சூழ்ந்து கொள்ளும் போது, அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் சுவாசியுங்கள், பிசாசுகள் ஓடிப்போகும். நினைவிருக் கட்டும் அடுத்த ஞாயிறு காலையில் உங்களை இங்கே சந்திக்க நம்பிக்கையாய் இருக்கிறோம். வியாதியஸ் தரையும் பாதிக்கப்பட் டோரையும் உள்ளே கொண்டு வாருங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் இப் பொழுது நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் அதை செய்வீர்களா? ஆமென். என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிக்கும் படியாக நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். அது இனிமையாகும் விலையேறப் பெற்றதுமாய் இல்லையா? 91உங்களை விட்டு போவது என்றால் எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாக இருக்கின்றது. நீங்கள் வெந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தும், ஆனாலும் அங்கே இன்னும் கொஞ்சம் காரியம் இருக்கின்றது. இன்னும் ஒரு சரணத்தை பாடுவோம், அதை செய் வீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா? இணைக்கும் அந்த கட்டு ஆசீர்வதிக்கப் படுவதாக என்னும் பாடல் சகோதரி, எத்தனை பேருக்கு அந்த பாடல் தெரியும், வருடங்களுக்கு முன்பாக நாங்கள் அதை வழக்கமாக பாடுவோம். நான் நினைத்துக் கொண்டிருந்தேன் இன்று இரவு கடந்து போய்விட்ட நூற்றுக் கணக்கானவர்களில் இரண்டு கரங்கள், இந்த ஜெப கூடாரத்தை சுற்றி அந்தப் பாடலை வழக்கமாக பாடும்போது, ஒருவர் இன்னொருவர் கரத்தை பற்றிக் கொள்வோம், இணைக்கும் அந்தக் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக, அவர்களில் அநேகரை இந்த கல்லறை கூடத்தில் அடக்கம் செய்து இருக்கிறேன். அவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களை மீண்டுமாய் சந்திப்போம். எப்பொழுதாவது ஒரு சமயத்தில், தரிசனத்தில் நான் திரைக்கு அப்பால் நோக்கி பார்க்கும்போது, நான் அவர்களை கண்டேன் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் நாம் அந்த பாடலை பாடும் போது நம்முடைய தலைகளை வணங்கியவாறு இருப்போம். இப்பொழுது உங்கள் கரத்தை நீட்டி இன்னொருவர் கரத்தை பற்றிப் பிடியுங்கள். இப்பொழுது உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். நம்முடைய தலைகள் தாழ்ந்திருக்க கூட்டத்தை முடிக்கும் ஜெபத்திற்காக நான் இப்பொழுது ஆராதனையை போதகரிடம் திருப்புகிறேன்...